மட்டு-மாவட்டத்தில்-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள் 

batticaloa mahinda– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரப் பணிகள் தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் முன்னணியின் பங்காளி கட்சிகளால் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய இம் மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் ஜனாதிபதியின் தேர்தல் முகவர்கள்,கட்சி முக்கியஸ்தர்கள்,கட்சி அமைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்ற விஷேட கலந்துரையாடல் 14 நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பு –திருமலை வீதியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

batticaloa mahinda

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முகவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனும்,மட்டக்களப்பு தொகுதியின் தேர்தல் முகவராக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும்,கல்குடா தொகுதியின் தேர்தல் முகவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அமீர் அலியும்,பட்டிருப்பு தொகுதியின் தேர்தல முகவராக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

batticaloa

இத் தேர்தல் முகவர்களும் ‘லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களான அருன்தம்பி முத்து,சானக்கியன்இராசமாணிக்கம்,அலிசாஹிர் மௌலானா, எஸ்.சந்திரபால,எம்.எஸ்.றபீல் ,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர ருத்திர மலர் ஞானபாஸ்கரன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி. செல்வி மனோகர் ,தேர்தல் முகவரும்,தேசிய கடதாசி கம்பனியின் தலைவருமான மங்கள சீ செனரத்,முன்னாள் மட்டக்களப்பு மாசகர சபையின் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் பங்காளி கட்சி முக்கியஸ்தர்களும் கொண்டனர்.

hizbulla

இக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இம் மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெருமளவு ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டதுடன் கிராம,பிரதேச மட்டங்களில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு ஆதரவு திரட்டுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இது தவிர கிராம மட்ட,பிரதேச மட்ட கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் அமைப்பாளர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு திரட்டுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டது.

Published by

One response to “மட்டு-மாவட்டத்தில்-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள் ”

  1. All are bunch of jockers/ my friends just think about reality

Leave a comment