– ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி / பழுலுல்லாஹ் பர்ஹான்
அக்குரணை: ‘மாற்றத்திற்கான நமது தெரிவு மைத்திரி’ எனும் கருப்பொருளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு அக்குரணை நகரில் இடம்பெற்றது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் அக்குரணை அரபா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், கண்டி பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டமைக்கான காரணங்களை விளக்குவதாக மேற்படி மக்கள் சந்திப்பு அமைந்திருந்தது.
இதன்போது அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேசிய ரீதியாக மேற்கொண்டுவரும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகவே மேற்படி மக்கள் சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment