காத்தான்குடி: காத்தான்குடி நகரில் மிக சிறப்பாக இயங்கிவரும் பிஸ்மி கிண்டர் காடன் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 14-12-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லடி கிரீன் காடன் ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது. பிஸ்மி கிண்டர் காடன் மற்றும் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலைகளின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் என்.எம்.முஜீப் (நளீமி) கலந்து கொண்டார்.
இதன் போது பல்வேறு நிகழ்சிகளில் பங்குபற்றிய பாலர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழும்,நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு பிஸ்மி கிண்டர் காடன் பாலர் பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்ப் பாடல், பிஸ்மி குட்டீஸ், சிங்களப் பாடல், உரையாடல்,சிறுவர் மாநாடு, நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் காரியாலயத்தின் பிரதம கணக்காளர் எம்.ஏ.எம்.சுஹைர்,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் ஜிப்ரி (மதனி), மனித உரிமைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரீ.எம்.அஸ்மி தாஜூதீன்,வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அன்வர் உட்பட புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள், பிஸ்மி குழுமத்தின் பணிப்பாளர்கள் ,உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by









Leave a comment