புதிய காத்தான்குடி தெற்கு ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் 2014 கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: புதிய காத்தான்குடி தெற்கு ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் 2014 கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 15-12-2014 இன்று திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் தலைவர் எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது பாலர் கலை நிகழ்வில் பங்குபற்றி சிறப்பாக நிகழ்ச்சிகளை செய்த பாலர்களுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அதிதிகளினால் பரிசும், சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் சிங்களப் பாடல், ஆங்கிலப் பாடல், வினாவிடை போட்டி, நாடகம், ஹிந்திப் பாடல் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ. பதுர்தீன், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர், காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் துலங்கிகா குணரத்ன, திவிநெகும திணைக்கள காத்தான்குடி பிரதேச அதிகாரி எம்.ஏ.எம். சுல்மி, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸா உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment