காத்தான்குடிக்கு மஹிந்த வருகை: வீடுகளில் விசாரணை!

unnamed1– நமது நிருபர்

காத்தான்குடி: எதிர்வரும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காத்தான்குடிக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு ஹிஸ்புல்லாஹ் மைதானத்தை சூழவுள்ள வீடுகளிலும், மஹிந்த ராஜபக்ஸ அழைத்துவரப்பட இருக்கும் வீதியோர வீடுகளிலும் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் குடும்ப அங்கத்தவர்களின் விபரங்களையும், குடும்பத்தினர்களின் எண்ணிக்கைகளையும் விசாரித்து பதிவுசெய்து வருகின்றனர்.

அதிகமான பெண்கள், தாய்மார்களுக்கு மஹிந்தவின் வருகை மகிழ்ச்சையைக் கொடுத்ததாக அறியமுடியவில்லை. ஏதோ ஓர் விழாவுக்கான ஒழுங்குகள் இடம்பெறுவதைப் போலவும், அதனைக் காண்பதற்கு வழமை போல் ஆண்களும் பெண்களும் சென்றுவருவதையுமே காத்தான்குடியின் தற்போதய அரசியல் நிலைமை தெரிகிறது.

Published by

Leave a comment