காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும உத்தியோகத்தர்களுக்கு இதுவரையிலும் தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை என காத்தான்குடி பிரதேசத்தில் கடமைபுரியும் திவிநெகும முகாரமயாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றயதினம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ எம் ஹிஸ்புள்ளாவின் அழைப்பின்பேரில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்திற்கு ஜனாதிபதி வருகை தொடர்பாக விளக்கமளிக்கும் விஷேட கூட்டம் அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் இடம்பெற்றது இதன்போதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக தான் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி விரைவாக பெற்றத்தர நடவடிக்கை எடுப்பதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ எம் ஹிஸ்புள்ளா தெரிவித்தார்
அவர் மேலும் தனதுரையில் எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ இன்ஷா அல்லாஹ் வெற்றியீட்டுவார் ஐனாதிபதியானதும் பல்வேறு வேலைத்திட்டங்கள் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும். திவிநெகும உத்தியோகத்தர்களாகிய நீங்கள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட்டுள்ளீர்கள் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கவும் வறுமையை போக்கவும் மேலும் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் இதற்கு நீங்கள் பூரண ஒத்தழைப்பு நல்க வேண்டும் இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.
Published by



Leave a comment