– ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிகொழும்பு: “நல்லாட்சியை நோக்கிய ஆட்சி முறை மாற்றமும், இளைஞர்களின் பங்களிப்பும்” என்ற தொனிப்பொருளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த விஷேட கலந்துரையாடலொன்று நேற்று மாலை மருதானையில் இடம்பெற்றது.
மருதானை YMMA கேட்போர்கூடத்தில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்குழு உறுப்பினர் நௌஷாத் மக்ரூபின் தலைமையில் இடம்பெற்ற மேற்படிக் கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், உப தவிசாளர் MJM.மன்சூர், தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சட்டத்தரணி இம்தியாஸ் வஹாப், ஹனான் ஆகியோர் உரையாற்றினார்கள்.
ஆட்சிமுறை மாற்றத்திலும் அரசியலிலும் இளைஞர்கள் எப்பங்கினை வகிக்க வேண்டும் என்பதுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இளைஞர்களுக்கு அரசியலில் ஈடுபட எவ்வாறு களம் அமைத்துக்கொடுத்துள்ளது என்பது தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
Published by



Leave a comment