ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடியில்

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று 15-12-2014 திங்கட்கிழமை இரவு காத்தான்குடியில் இடம்பெற்றது.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் காத்தான்குடி ரெலிகோம் வீதியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இங்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதி செய்வதற்கு முஸ்லிம்கள் என்ன பங்களிப்பு செய்ய வேண்டுமென்பது தொடர்பாக சிறப்புரையாற்றினார்.

இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எம். அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கீர், சியாட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட பெரும் திரளான கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment