Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “ரங்காவுக்கும் சக்தி தொலைக்காட்சிக்கும் எதிராக வழக்குத்தாக்கல்”

    கொழும்பு: சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனை இலக்கு வைத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெ.ஸ்ரீ ரங்கா தனிப்பட்ட ரீதியில் இனிவரும் மின்னல் நிகழ்ச்சியில் கருத்துக்களை முன் வைப்பார் எனில் அவருக்கும்,சக்தி தொலைக்காட்சிக்கும் எதிராக வழக்கொன்றினை தாக்கல் செய்யப் போவதாக சிரேஷ்ட ஊடகவியலாளரும்,சமாதான நீதவானுமாகிய இர்ஷாத் றஹ்மத்துல்லா தெரிவித்துள்ளார்.

  • ஜனாதிபதி பங்கேற்ற காத்தான்குடி கூட்டத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்களை ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வையிட்டார்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து 20-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தாங்கு கம்பி அங்கு வீசிய பலத்த காற்றினால் உடைந்து விழுந்ததில் ஆறு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

  • போர்க் குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை – மைத்திரிபால

    கொழும்பு: இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எதிரணி தரப்பிலான பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்கள், இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையொன்றை நடத்த முடியாது என்றும், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தாம் வெற்றிபெற்றால், அதற்குப் பதிலாக உள்ளூரில் சுதந்திரமான நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்துவேன் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

  • புத்தளத்தில் வெள்ளம் காரணமாக பல பிரதேசங்கள் பாதிப்பு

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா  புத்தளம்: தற்போது பெய்துவரும் மழையினை அடுத்து புத்தளம் மாவட்டத்தில் புத்தளம்,கருவலகஸ்வௌ, நவகத்தேகம மற்றும் முந்தல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

  • புத்தளத்தில் வெள்ளம்

    புத்தளம்: தற்போது பெய்துவரும் கடும் மழையினையடுத்து புத்தளம் கடையாக்குளம், நூர் நகர் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்ட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான வீடுகளை, புத்தளம் நகர சபை உறுப்பினர் முஹ்ஸி, தொழிலதிபர் அலிசப்ரி, நகர சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.றபீக் ஆகியோர் இந்த பிரதேசத்தை பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.

  • “முடிவு எடுக்காமை முடிவு” “காலம் கடத்தும் ஞானம்”

    கலந்தர் லெப்பை : சேர், நம்மட கம்பனி ஏன் முடிவ எடுக்காம இருக்குறாங்க ? குட்டி சுல்தான் மதார் : முடிவ எடுத்தா கட்சி ரெண்டாயிடும் காக்கா.. கலந்தர் லெப்பை : அப்ப ஹசரத் மாரெலாம் கூப்புட்டு ஓடிய மாட்டோமுன்னு பைஅத்து எடுத்த தானே மனே..

  • இலங்கை அணி நியூசிலாந்து பயணம்

    கொழும்பு: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் காயம் குணமடையாத காரணத்தால் விளையாட மாட்டார் என இலங்கை அணியின் முகாமையாளர் மைக்கல் டி சொய்ஸா தெரிவித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியின் முன்னராக இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் ஈடுபட்ட போது இடது காலின் மேல் தொடைப்பகுதியில் இடம்பெற்ற காயம் காரணமாக இவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

  • ‘இனியும் இனியும் உங்களுடைய பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்வோம்’ காத்தான்குடியில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் முழுமையான ஒலிவடிவம்

    – ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து 20-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு முஸ்லிம் மக்கள் மத்தியில் சிங்களத்திலும், தமிழிலும் 18 நிமிடம் ஆற்றிய விஷேட உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  • காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் -ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து 20-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

  • பசிலிடமிருந்து கோத்தாவிடம் கைமாரும் ஜனாதிபதித் தேர்தல் பொறுப்புகள்

    கொழும்பு: ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பசில் ராஜபக்ச செயற்படுத்தி வந்த சகல பொறுப்புகளும் கோத்தபாய ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான சகல விடயங்களையும் பொறுப்புடன் செயல்படுத்தி வந்த பசில் ராஜபக்ச, கட்சி மாறிய திஸ்ஸ அத்தநாயக்காவிற்கு சுகாதார அமைச்சை கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

  • ‘செக்ஸ்டார்ஷன்’ மோசடியில் ஈடுபடும் பிலிப்பைன்ஸ் கும்பல்கள்

    லண்டன்: உலகம் முழுவதும் இணையம் வழியாக நடக்கும் ஒரு மோசமான மோசடிக்கு ஆயிரக்கணக்கான ஆண்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் “செக்ஸ்டார்ஷன்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மோசடி அடிப்படையில் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பது.

  • முதியோர்கள் முணுமுணுப்பு

    – ஆபூ ஸைனப் காத்தான்குடி: இன்று காத்தான்குடியில் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு அயல் பிரதேசங்களிலிருந்து பல நூறுபேர் பஸ் வண்டிகளில் அழைக்கப்பட்டு வந்திருந்தனர். இவர்களுள் முதியோர் இல்லங்களில் இருந்தும் பல முதியோர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

←Previous Page
1 … 589 590 591 592 593 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar