காத்தான்குடி: ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து 20-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தாங்கு கம்பி அங்கு வீசிய பலத்த காற்றினால் உடைந்து விழுந்ததில் ஆறு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் தற்போது 4 பெண்கள் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் 26 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையயில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த பெண்களை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 20-12-2014 இன்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
அத்தோடு காயமடைந்தவர்களின் தற்போதய நிலமை தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுடன் கேட்டரிந்ததுடன் அவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்யும்படி அவரின் இணைப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் உட்பட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment