கொழும்பு: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் காயம் குணமடையாத காரணத்தால் விளையாட மாட்டார் என இலங்கை அணியின் முகாமையாளர் மைக்கல் டி சொய்ஸா தெரிவித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியின் முன்னராக இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் ஈடுபட்ட போது இடது காலின் மேல் தொடைப்பகுதியில் இடம்பெற்ற காயம் காரணமாக இவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது காயம் குணமடைய இன்னமும் மூன்று வாரங்கள் எடுக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆனால் ரங்கன ஹேரத் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்குவார் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் பங்கு பற்றுவதற்காக இலங்கை அணி நேற்று முன்தினம் நிய+சிலாந்து பயணமானது.
இலங்கை அணி 21ம் திகதி நிய+சிலாந்து 11 பேர் அணியுடன் முதலாவது பயிற்சிப் போட்டியில் மேதவுள்ளது. ரங்கன ஹேரத் இவ்வருடம் மட்டும் அதிகூடுதாலான விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அதேநேரம் இலங்கை அணியில் ரங்கன ஹேரத்துக்கு பதிலாக இளம் பந்துவீச்சாளரான டில்ருவன் பெரேரா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் இந்த வருடம் 36 விக்கெட்டை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி 2004ம் ஆண்டு நியூசிலாந்துக்கு சுற்றுப்பணம் செய்து விளையாடிகொண்டிருந்த போது இலங்கையில் சுனாமி தாக்கியதும் குறிப்பிடத்தக்கது. அந்த தொடரை கைவிட்டு இலங்கை அணி நாடு திரும்பியது. TK
Published by

Leave a comment