காத்தான்குடி: இன்று காத்தான்குடியில் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு அயல் பிரதேசங்களிலிருந்து பல நூறுபேர் பஸ் வண்டிகளில் அழைக்கப்பட்டு வந்திருந்தனர். இவர்களுள் முதியோர் இல்லங்களில் இருந்தும் பல முதியோர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் பி.ப இரண்டு மணியிலிருந்து மாலைவரை கடுமையான மழைக்கு மத்தியில் பசியுடன் ஏங்கித் தவித்திருந்ததையும் காண கவலையாக இருந்தது.
“ஆயிரம் ரூபாயும், சாப்பாட்டு பார்சலும் தருகிறோம் என்று எங்களை அழைத்து வந்தார்கள். மாலையாகி விட்டது. இன்னும் சாப்பாடே கிடைக்கவில்லை. எங்களுக்கு பசிக்கிறது. தாங்க முடியவில்லை” என பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் பரிதாபமாக தெரிவித்தனர். பாவம் அந்த முதியவர்கள்
(குறித்த படங்களை பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்)
Published by


Leave a comment