“முடிவு எடுக்காமை முடிவு” “காலம் கடத்தும் ஞானம்”

politicsகலந்தர் லெப்பை : சேர், நம்மட கம்பனி ஏன் முடிவ எடுக்காம இருக்குறாங்க ?

குட்டி சுல்தான் மதார் : முடிவ எடுத்தா கட்சி ரெண்டாயிடும் காக்கா..

கலந்தர் லெப்பை : அப்ப ஹசரத் மாரெலாம் கூப்புட்டு ஓடிய மாட்டோமுன்னு பைஅத்து எடுத்த தானே மனே..

சுல்தான் மதார் : நம்மட தலைவர் சாணக்கியமா காய் நகர்த்தினாரு, கட்சி தலைமைய மிஞ்சி பேரம் பேசினவங்க இப்போ அதிகாரத்துல இருக்கிற (அவுங்கட கணக்குல வெல்லுற) குதிரயோட சேர்ந்து கட்சிய ஒடச்சி போடாம கவனமா காலத்த தள்ளுறாரு.

கலந்தர் லெப்பை : அப்போ மக்கத்துக் போறத்துக்கு மொதல்லையே முடிவைப் பண்ணிட்டு தான் கிளம்பினாங்களோ ?

சுல்தான் மதார்: நாம தானே அவருக்கு மூன்றாவது முறையும் பதவிக்கு வரலாமுன்னு 2010 இலேயே சொல்லிட்டோமே, இப்ப நம்மட மூத்த மாமா மாறு கணக்கு வழக்குகள கூடிக் கழிச்சி வெல்லுற குதிரையில பந்தயம் கட்டி ஈக்கிராப்ள.

கலந்தர் லெப்பை : அப்ப நம்மட ஞாயத்த சொல்லி சனத்துக்கு விஷயத்த வெளாவாரியா சொலரதானே மனே…ரெண்டு முறை “நாரே தக்பீர்” போட்டா சனம் அடங்கிரும். ச்சும்மா அதிருமில்ல..!

குட்டி சுல்தான் மதார் : வெளங்கிடும்……இப்போ பகிரங்கமா மேட போட்டா கல்லடி தான் உழும், கட்சியில் சிலர் உடைத்துக் கொண்டு வெளியேறி விடுவார்கள், அவுங்க மேடை போட்டா மக்கள் வெள்ளம் மைத்திரி அலையா பாயுமில்ல.

கலந்தர் லெப்பை : அப்போ என்னதான் செய்ற மனே..

குட்டி சுல்தான் மதார் : முடிவெடுக்காமலே காலத்த தள்ளி ரொம்பத் துள்ளுற ஆட்டுக் குட்டிகள பார்த்து குர்பான் கொடுக்குற..இல்லானா கொழுக்க வைக்கிற…

கலந்தர் லெப்பை : நம்மளுக்கு ஆதரவு இல்லாட்டியும் பறுவாயில்ல..மைத்ரி மேடையில ஏறிப் புடாதுங்கோ என்று கட்டளை வந்திருக்கோ கிளி..

குட்டி சுல்தான் மதார் : நடு நெலமையா நிக்குறதுல ஒரு புதிய முறைய கையாளுறோம் காக்கா…சேதாரத்த குறைக்க வேற வழியில்லயே.

கலந்தர் லெப்பை : கொஞ்சம் வெபரமா சொல்லுங்க மனே…அங்கால பார்லிமண்டு தேர்தலும் வாராப்ல

குட்டி சுல்தான் மதார் : இப்போ நம்மட குதிர வெல்லும் எண்டுதான் டீலு பலர் பண்ணியிருக்காங்க, அந்தக் குதிரை வென்றா பார்லிமெண்டு தேர்தல செலவு செல்வக்கோட நாம பாத்துக்குவோம்.

கலந்தர் லெப்பை : அப்போ சனத்துக்கு என்ன சொல்ற மக்காள்..

குட்டி சுல்தான் மதார் : நம்மட தலைவர் பாது காப்பு செயலாளர சந்திச்சி தீரு கேட்ட ..கெடச்ச மாதிரி தான்…

கலந்தர் லெப்பை : ஒண்டு ரெண்ட சொல்லுங்க விபரமா மனே..

குட்டி சுல்தான் : கருமலையில ஒடச்சிப் போட்ட பள்ளிய பத்துக்கு பத்து அடி கட்டி கம்புபோட்டு தகரம் போட்டு சுத்திவர வேலி போட்டு புதிசா கட்டி மக்களுக்கு குடுத்த, ஒலுவில் ராணுவ முகாம அகற்றின…

கலந்தர் லெப்பை : அதென்ன மனே வேலி ?

குட்டி சுல்தான் மதார் : பாதுக்காப்பு காரணங்கள் தான் காக்கா..? நம்ம சனத்துட பத்தாயிரம் ஏக்கர் காணில பள்ளியோட கொஞ்சம் காணிதான் கெடச்சிருக்கு..காட்டுல புலி இல்லாட்டியும் இப்போ சிங்கம் இருக்குதில்ல..

தம்புள்ள பள்ளிக்கு வேறு எடத்துல காணி பார்க்க நம்மட தலைவர் போன….

கலந்தர் லெப்பை : மக்கள் ஏத்துக்குவாங்களா மனே..

குட்டி சுல்தான் மதார் : ஏற்றுக் கொண்டுதானே காக்கா வெள்ளிக்கெழமை வேலி போட்ட பள்ளில நாம ஜும்மா தொழுத…

கலந்தர் லெப்பை : “முடிவு எடுக்க மாட்டோம்” என்ற முடிவு உண்மையிலே உலகத்துக்கே புதிய முடிவு மனே..”காலம் கடத்தும் ஞானம்” ஒங்கட சாணிக்கியத்த மெச்ச…

குட்டி சுல்தான் மதார் : கொஞ்சம் கொஞ்சமா தீர்வ தள்ளிப்போட்டு காலத்த கடத்தினா நம்மட சனம் எல்லாத்தையும் மறந்துடும் காக்கா…

ஒவ்வொரு முறையும் நீங்க இப்பிடித்தான் ஓவரா பேசிட்டு…நாரே தக்பீர் போட்டு நம்மட கட்சி நம்மட கட்சின்னு முன்னால வந்து கட்சி வேல பாக்குற.

கலந்தர் லெப்பை : நிலைப்பாடு தெரியாம சனம் கொழம்பி போயிருக்கு..

குட்டி சுல்தான் மதார் : காக்கா நம்ம சனம் ஒண்டும் முட்டாள் இல்ல…அவுங்களுக்கு தெரியும்…நாம முடிவ வேற மாதிரி எடுத்திருந்தா எப்பவோ பதவி பட்டங்கள உட்டுப் போட்டு நாடு நெலமையா இருந்து முடிவேடுத்திருப்போம்.

சும்மா மூடிக்கிட்டு இருங்க காக்கா…இருட்டுல வேற திருட்டுப் பூணைகள்…

“எடுத்த எடுப்பில எடுத்தெறிந்து முடிவுகள எடுக்காம நாம சரியான தருணத்துல சரியான முடிவ பொறுப்பாக எடுக்கணும், இப்போ சமயோசிதமா சாமர்த்தியமா காலத்த கடத்துறத பலரும் பாராட்டுறாங்க, எண்டாலும் நாம மாட்டிக்கிட்டு முளிக்கிறத அவுங்களுக்கெல்லாம் தெரியாது”

“காலம் கடத்தும் ஞானம்”

ரெண்டு முறை “நாரே தக்பீர்” போட்டா சனம் அடங்கிரும். ச்சும்மா அதிருமில்ல..!

Published by

Leave a comment