“ரங்காவுக்கும் சக்தி தொலைக்காட்சிக்கும் எதிராக வழக்குத்தாக்கல்”
கொழும்பு: சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனை இலக்கு வைத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெ.ஸ்ரீ ரங்கா தனிப்பட்ட ரீதியில் இனிவரும் மின்னல் நிகழ்ச்சியில் கருத்துக்களை முன் வைப்பார் எனில் அவருக்கும்,சக்தி தொலைக்காட்சிக்கும் எதிராக வழக்கொன்றினை தாக்கல் செய்யப் போவதாக சிரேஷ்ட ஊடகவியலாளரும்,சமாதான நீதவானுமாகிய இர்ஷாத் றஹ்மத்துல்லா தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் ஒருவராக தற்போதைய அமைச்சர் றிசாத் பதியுதீன் காணப்படுவதுடன்,சகல இன மக்களுக்காகவும் துணிந்து பேசக் கூடியவராகவும் இருந்தவந்துள்ளார்.குறிப்பாக வடக்கில் தமிழ்,முஸ்லிம் மக்களினால் நேசிக்கப்படும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இம்மக்களுக்கு ஆற்றிவரும் பணிகள் தொடர்பில் எதுவும் அறிந்திராத ஸ்ரீரங்கா,தமக்கு கிடைக்கும் பொய்யானதும்,பிழையானதுமான தரவுகளின் அடிப்படையில் தொடராக அமைச்சர் றிசாத் மீது கட்டுக்கதைகளை புனைந்து அதனை மின்னலில் அரங்கேற்றிவருவது தொடர்பில் முஸ்லிம்கள் தரப்பில் கடும் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு அரசியல்வாதி என்ற வகையில் அவருடன் கருத்து முரண்பாடுகளை பேசுவதில் நாம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.ஆனால் அவர்கள் ஸ்ரீரங்கா அவர்கள்,அமைச்சரை மட்டுமல்லாது அவரது சகோதரர்களையும் சாடும் வகையில் அவர்களது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசுவது கண்டனத்துக்குரியது.
இர்ஷாத் றஹ்மத்துல்லா
தமிழ் பேசும் மக்களுக்கு விமோசனம் என்று பொய்யுரையுடன் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் நாட்டுக்கும்,மக்களுக்கும் பிழையான தகவலினை தெரிவிப்பதான,ஜனநாயக நாடொன்றின் தனிநபர் சுதந்திரத்திற்கும்,தகவல் அறியும் சட்டத்திற்கும் முரணானது என்பதை திரு.ஸ்ரீரங்கா அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இர்ஷாத் றஹ்மத்துல்லா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் என்ற வகையில் தனிப்பட்ட ஒருவரது சேவைகளை மக்கள் மத்தியில் கொண்டுவர வேண்டியது எமது பொறுப்பும்,ஊடக தர்மமமுமாகும் என் சுட்டிக்காட்டியுள்ள இர்ஷாத் றஹ்மத்துல்லா,தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும்,அரசாங்கத்தில் சன்மானங்களை பெறுவதற்காகவும் ஒருவரை அவமானப்படுத்துவது என்பது ஊடகவியலாளரின் பணியல்ல என்தையும் இங்கு சுட்டிக்காட்டியுள்ள இர்ஷாத் றஹ்மத்துல்லா,தொடர்ந்து தனி நபர ஒருவர் மீது அவதுாறு செய்யும்,மற்றும் அவமானப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி இடம்பெறும் என்றால் அது தொடர்பில் சட்டத்தின் நீதியினை கோறப் போவதாகும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Leave a comment