Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “தனக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்”: ரிசாத்

    கொழும்பு: “தனக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பதியூதீன் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  • ஆட்சியாளர்களின் சுகபோக வாழ்க்கைக்காக மக்கள் சுரண்டப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: ‘ஆட்சியாளர்களின் சுக போக வாழ்க்கைக்காக பொதுமக்களின் பணமும் உழைப்பும் சுரண்டப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது. நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றத்திற்கான வேலைத்திட்டத்தில் நாம் இணைந்து செயற்படுவதற்கு இதுவும் ஒர் முக்கிய காரணமாகும்’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் நேற்றைய தினம் தெரிவித்தார்.

  • ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்திலுள்ள தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வரும் 161 குடும்பங்களுக்கு பெட்சீட், குடிநீர் போத்தல், பிஸ்கட் என்பன வழங்கும் நிகழ்வு   24-12-2014 புதன்கிழமை காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

  • அமீர் அலிக்கு ஓட்டமாவடியில் வரவேற்பு

    எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி: கடந்த 12.12.2014 வெள்ளிக்கிழமை சபானாயகர் முன்னிலையில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக   பதவியேற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியினை வரவேற்க்கும் நிகழ்வு (24) வியாழக்கிழமை ஓட்டமாவடியில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • காவத்தமுனை பிரதேச வைத்தியசாலைக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நிதி ஒதுக்கீடு

    பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பிரதேச வைத்தியசாலைக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 24-12-2014 புதன்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

  • சமூகத்துக்காக குரல் கொடுக்க வந்த எங்களை அரசபடைகளைக் கொண்டு அடக்க முற்படுவது கோழைத்தனம் – பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர்

    ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களை  ஆதரிப்பது என்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தீர்மானத்துடன் இன்று மாலை ஏறாவூருக்கு திரும்பிய கிழக்குமாகாணசபை பிரதித்தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். சுபைர் அவர்களுக்கு ஏறாவூர் மக்களால் கொட்டும் மழையிலும்  மகத்தான வரவேற்பு அளிக்கபட்டது .

  • காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் திவிநெகும பயனாளிகள் 600 பேருக்கு வீடு திருத்துவதற்கான முதற்கட்ட மானிய உதவி வழங்கி வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான்   காத்தான்குடி: ‘செழிப்பான இல்லம் ‘எனும் தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவி வழங்கும் பணிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கையில் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.

  • காத்தான்குடி இளம் உலமாக்கள் முன்னனி உதயம் – பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் விசேட சந்திப்பு

    டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி இளம் உலமாக்கள் முன்னனியின் தலைவர் அல்ஹாபிழ் மௌலவி எம்.ஏ.எம். மின்ஹாஜூதீன் (பலாஹி) தலைமையில் இளம் உலமாக்களின் அங்கத்தவர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதிஅமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று (24.12.2014 புதன்கிழமை இரவு 08.30 மணியழவில்) பிரதி அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் நடைபெற்றது.

  • வெள்ள அனர்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிம்மா நிறுவனம் சமைத்த உணவு வழங்கி வைப்பு

    எம்.ரீ.எம்.பாரிஸ் காவத்தமுனை: வெள்ள அணர்ததினால் பாதிக்கப்பட்ட கோறளைபற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் காவத்தமுனை மக்களுக்கு அல்-கிம்மா நிறுவனத்தின் நேசக்கரம் சமைத்த உணவு பொதிகளை வழங்கியது.

  • அல் – கிம்மா நிறுவனம் வறிய குடும்பங்களுக்கு கேஸ் சிலின்டர் மற்றும் அடுப்புக்கள் வழங்கி வைப்பு

    எம்.ரீ.எம்.பாரிஸ் மாவடிச்சேனை: அல்-கிம்மா நிறுவனம் வறிய பத்து குடும்பங்களுக்கு ஒரு இலட்சத்து  20 ஆயிரம் ரூபாய் பொறுமதியான கேஸ் சிலின்டர் மற்றும் கேஸ் அடுப்புக்களை வழங்கி வைத்தது.

  • “தபால் மூல வாக்கெடுப்பின் போது கடுமையான தேர்தல் விதி மீறல்கள்இடம்பெற்றிருக்கின்றன”: கபே

    கொழும்பு: தபால் மூல வாக்கெடுப்பின் போது கடுமையான தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்றதாக கபே முறைப்பாடு செய்துள்ளது.தபால் மூல வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றதுடன், இன்றும் தபால் மூலம் வாக்களிப்புச் செய்ய முடியும். தபால் மூல வாக்கெடுப்பு நடைபெற்ற நேற்று, அரச தனியார் ஊடகங்களில் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது என கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

  • சிறிகொத்தவிற்கு முன்னால் இரண்டு குழுக்களுக்கு இடையில் தற்போது மோதல்:

    கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சிறிகொத்தவிற்கு முன்னால் இரண்டு குழுக்களுக்கு இடையில் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் சிறிகொத்தவிற்கு வெளியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.

←Previous Page
1 … 584 585 586 587 588 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar