காவத்தமுனை பிரதேச வைத்தியசாலைக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நிதி ஒதுக்கீடு

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

ஓட்டமாவடி: கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பிரதேச வைத்தியசாலைக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 24-12-2014 புதன்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

அங்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் வைத்தியசாலை அதிகாரிகளிடம் வைத்தியசாலையின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது குறித்த பிரதேச வைத்தியசாலையின் கூரை திருத்தப் பணிகளுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ் விஜயத்தில் ஒட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் மீரான் உட்பட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஒட்டமாவடி பிரதேச இணைப்பாளர் கஸ்ஸாலியும் கலந்து கொண்டார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment