காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் திவிநெகும பயனாளிகள் 600 பேருக்கு வீடு திருத்துவதற்கான முதற்கட்ட மானிய உதவி வழங்கி வைப்பு

unnamed4பழுலுல்லாஹ் பர்ஹான்
 
காத்தான்குடி: ‘செழிப்பான இல்லம் ‘எனும் தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவி வழங்கும் பணிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கையில் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு குடும்பத்திற்கு 2500 ரூபாய் வீதம் சுமார் 5300 வாழ்வின் எழுச்சி திவிநெகும பயனாளிகளுக்கும் வீட்டு மானிய உதவி வழங்கும் திட்டத்தில் சுமார் 600  பேருக்கு வீட்டு மானிய உதவி வழங்கும் நிகழ்வு  24-12-2014 புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச திவிநெகும அதிகாரி ஏ.எம். சுல்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு மேற்படி 600 பேருக்கு வீட்டு மானிய உதவித் தொகை 2500 ரூபாவை வழங்கி வைத்தார்.

இதன் போது திவிநெகும பயனாளிகள் இரண்டு பேருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர், வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஆர். மனோஹிதராஜ், காத்தான்குடி பிரதேச வாழ்வின் எழுச்சி திவிநெகும வங்கி முகாமையாளர் ஏ.எல்.செட் பஹ்மி உட்பட திவிநெகும உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment