காத்தான்குடி இளம் உலமாக்கள் முன்னனி உதயம் – பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் விசேட சந்திப்பு

DSC00145டீன் பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி இளம் உலமாக்கள் முன்னனியின் தலைவர் அல்ஹாபிழ் மௌலவி எம்.ஏ.எம். மின்ஹாஜூதீன் (பலாஹி) தலைமையில் இளம் உலமாக்களின் அங்கத்தவர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதிஅமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று (24.12.2014 புதன்கிழமை இரவு 08.30 மணியழவில்) பிரதி அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் நடைபெற்றது.

அண்மையில் உருவாக்கப்பட்ட இளம் உலமாக்கள் முன்னனியின் தலைவராக அல்ஹாபிழ் மௌலவி எம்.ஏ.எம். மின்ஹாஜூதீன் (பலாஹி),  செயலாளராக மௌலவி பீ.டீ.எம். இல்யாஸ் (நஹ்ஜி), பொருளாலா அல்ஹாபிழ் மௌலவி எம்.யு.எம். பைரூஸ் (பலாஹி), உப-தலைவர் அல்ஹாபிழ் ஏ.ஜீ. அபதுர் ரஹீம் (பலாஹி), உப – செயலாளர் அல்ஹாபிழ் மௌலவி ஏ.எம். கஸ்ஸாலி (பலாஹி) ஆகியோர் தெரிவாகி உள்ளனர்.

மேற்படி உலமாக்கள் உள்ளடங்களாக சுமார் 30 க்கும் மேற்பட்ட இளம் உலமாக்கள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை சந்தித்ததுடன் தங்களின் முன்னனியின் உருவாக்கம், அதன் எதிர்கால திட்டம், கல்வி மேம்பாடு, ஒற்றுமை,  என்பன போன்ற மேலும் பல்வேறு திட்டங்களையும் அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

‘உலமாக்கள் என்பவர்கள் நபிமார்களின் வாரிசுகள்’ நான் எப்போதும் கண்ணியமிக்க உலமாக்களை நேசிப்பவன் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் எதிர்காலத்தில் உலமாக்கள் கல்வித்துறையில் மேலும் முன்னேறி சிறப்படைய வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ்வின் உதவியுடன் அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முழு ஒத்துழைப்புடன் இலங்கையில் உலமாக்களுக்கான பல்கலைகழகம் ஒறினை உருவாக்கி இருக்கின்றோம். எனவே உங்களைப் போன்ற இளம் உலமாக்கள் இந்த பல்கலைகழகத்தில் கல்வியினை இலவசமாக தொடர என்னால் ஆன உதவிகளை எதிர்காலத்தில் சேய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

காத்தான்குடி இளம் உலமாக்கள் முன்னனியின் எதிர்கால செயல்பாட்டினை திறம்பட செய்யவென கணிணி ஒன்றினை இலவசமாக வழங்குவதுடன், ஜனாசா தொடர்பான விடயங்களுக்கும் நிதி உதவி வழங்குவதாகவும் இதன் போது அமைச்சர் உறுதியளித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் சகல செயல்பாடுகளுக்கும் எமது முன்னனி தனது ஆதரவினை எப்போதும் வழுங்கும் என இச்சந்திப்பின் இளம் உலமாக்கள் முன்னனியின் உறுப்பினர்கள் தெரிவத்தனர்.

DSC00145

DSC00146

DSC00139

DSC00137

DSC00141

 

Published by

One response to “காத்தான்குடி இளம் உலமாக்கள் முன்னனி உதயம் – பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் விசேட சந்திப்பு”

  1. யா அல்லாஹ் யாரைப்
    பார்த்து பைத்திய கார கூட்டம் என்று அவர்களையே பைத்திய கார கூட்டமாக ஆக்குவாயாக

Leave a comment