Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நாட்டின் தேசிய நலனில் முஸ்லிம்களின் வகிபாகம் ஆரோக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்திருக்கிறது

    – அ ஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா கொழும்பு: 2009ஆம் ஆண்டு, மே மாதம் 18ந் திகதி பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கைக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்தது. நாம் பெற்ற அந்த அளப்பரிய யுத்த வெற்றி- எமது நாட்டுக்கும், எம் ஒவ்வொருவருக்கும் கிடைத்த பூரண சுதந்திரமாகும். அந்த வெற்றியில் ஒவ்வொரு முஸ்லிமும் பங்காளராயிருந்து செயற்பட்டிருக்கின்றோம். என்றுமே நாட்டின் தேசிய நலனில் முஸ்லிம்களின் வகிபாகம் ஆரோக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்திருக்கிறது

  • கல்முனைக் கரையோர மாவட்டம்முஸ்லிம்களின் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு மாற்றீடாக இருக்க முடியாது

    – மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கல்முனை: கல்முனைக் கரையோர மாவட்டம் என்றோ கிடைத்திருக்க வேண்டிய குறைந்த பட்ச உரிமை – அதை ஒரு அரசியல் இலஞ்சமாக கருதி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்வை முஸ்லிம்கள் எடுக்க முடியாது. முஸ்லிம்களுக்கெதிரான சவால்களை தேசத்திற்கு எதிரான சவலகளாக அணுகி தேசத்தில் உள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து தேசப்பற்றுடன் கூடிய அரசியல் நகர்வுகளில் நாம் பங்கு கொள்ளாவிடின் பெரும் வரலாற்றுத் தவறொன்றை இழைத்துக் கொண்டவர்கள் ஆவோம்.

  • “தேசத்துரோக ஒப்பந்தங்களை எனது கரங்கள் ஒருபோதும் செய்ததில்லை”

    கொழும்பு: சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என சகலருக்கும் அபிவிருத்தியின் பலன் சென்றடையும் வகையில் தேசிய ஒற்றுமையை விஸ்தரிக்க வழியமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி என்று எனது மூன்றாவது கொள்கை பிரகடனத்தினதும் தெளிவான நோக்கம் அது தான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

  • “அரசுக்கும் ஜனாதிபதிக்கும் ரிசாட் நயவஞ்சகம் செய்துவிட்டார்: முழு முஸ்லிம் சமூகத்துக்கும் தலைகுனிவு”

    கொழும்பு: அரசாங்கத்தில் இருந்த வரைக்கும் ‘ராஜா’ அந்தஸ்தினை அனுபவித்து வந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதியவர்களுக்கும் நயவஞ்சகம் புரிந்து விட்டதாக தகவல் தொடர்பாடல் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் கூறினார்.

  • இலங்கை முஸ்லிம்கள் வென்றுவிட்டனர்

    அரசியல்வாதிகள் சொல்வதை மக்கள் செய்தனர் அன்று! மக்கள் சொல்வதை அரசியல்வாதிகள் செய்கின்றனர் இன்று!! – இர்ஷாட் ஏ. காதர் கொழும்பு: சமூகவலைத்தளங்களின் வளர்ச்சி, இலங்கை முஸ்லிம்களின் மனதை உலகுக்கு எடுத்துக்காட்டி வருகின்றன. அது இலங்கை அரசியலில் சமகால ஜனாதிபதித் தேர்தல் கருத்துக்கள் பல்வேறுவகைகளில் வெளிப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

  • ரிஷாட் விலகல்: கவலையில் பசில்

    கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எதி­ர­ணிக்கு தாவி­யதன் மூலம் வடக்கு முஸ்லிம் மக்களை காட்­டிக்­கொ­டுத்­து­விட்டார். ஆனால் வடக்கு முஸ்லிம்­களை அர­சாங்கம் பாது­காக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்பாளரும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பஷில் ராஜ­பக்ஷ தெரிவித்தார்.

  • “ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல” : ஹிஸ்புல்லாஹ்

    காத்தான்குடி: நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் அக்கட்சிக்குள் முரண்பாடு தோன்றியுள்ளது. ஏற்கனவே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் எடுத்த முடிவு கட்சியின் ஒட்டுமொத்த முடிவு அல்ல என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் துனை அமைச்சருமான எம. எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

  • மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட நிகழ்வில் ரத்னசிறி விக்கிரமநாயக்க கலந்து கொள்ளவில்லை

    கொழும்பு: ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட நிகழ்வில், மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க கலந்து கொள்ளவில்லை. பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ‘மகிந்த சிந்தனை – முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை மகிந்த ராஜபக்ச வெளியிட்டு வைத்தார்.

  • நாரஹேன்பிட்டி இ.போ.ச பஸ் டிப்போவில் நடைபெற்றுக் கொண்டிருந்த தபால் மூல வாக்கு பதிவு அரசியல் தலையீட்டால் இடைநிறுத்தம்!

    கொழும்பு: கொழும்பு நாரஹேன்பிட்டி இ.போ.ச பஸ் டிப்போவில் நடைபெற்றுக் கொண்டிருந்த தபால் மூல வாக்கு பதிவு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவான குழு அந்த வாக்கு பதிவு நிலையத்திற்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்தியதே இந்த இடை நிறுத்தத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்

    ஜுனைட்.எம்.பஹ்த் அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ் தொடர்ந்து சில நாட்களாக நாட்டில் பெய்து கொண்டிருக்கும் பெருமழையின் காரணமாக, நாட்டின் பலபகுதிகளிலும் வெள்ளப் பெருக்கேட்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

  • ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக காத்தான்குடி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மிடையிலான விஷேட சந்திப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மிடையிலான விஷேட சந்திப்பொன்று 22-12-2014 நேற்று திங்கட்கிழமை இரவு காத்தான்குடியில் நடைபெற்றது.

  • ´மஹிந்த சிந்தனை – உலகை வெல்லும் வழி’: மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

    கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (23) வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் இன்று ஆரம்பமாகும் நிலையில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே அஞ்சல் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்கும் நிலை இருந்தது.

←Previous Page
1 … 585 586 587 588 589 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar