ஓட்டமாவடி: ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்திலுள்ள தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வரும் 161 குடும்பங்களுக்கு பெட்சீட், குடிநீர் போத்தல், பிஸ்கட் என்பன வழங்கும் நிகழ்வு 24-12-2014 புதன்கிழமை காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கமைய ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இந்ந நிவாரண பெருட்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 161 குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் மீரான் , பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஒட்டமாவடி பிரதேச இணைப்பாளர் கஸ்ஸாலி உட்பட ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டார்.
Published by

Leave a comment