காவத்தமுனை: வெள்ள அணர்ததினால் பாதிக்கப்பட்ட கோறளைபற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் காவத்தமுனை மக்களுக்கு அல்-கிம்மா நிறுவனத்தின் நேசக்கரம் சமைத்த உணவு பொதிகளை வழங்கியது.
‘உம்ரா புனித கடமையை’ நிறைவேற்ற சவூதி அரோபியா சென்றிருக்கும் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களின் கவனத்திற்கு நிறுவனத்தின் செயலாளர் ஐ.எம். றிஸ்வின் அவர்களினால் வெள்ள அணர்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது.
இதற்கமைவாக உடனடியாக செயற்படும் வன்னம் துரிதமாக முகாம்களில் தச்சம் புகுத்துள்ள காவத்தமுனை மக்களுக்கு அல்-கிம்மா நிறுவனத்தின் உதவும் கரம் சமைத்த உணவு வழங்கி வைத்தது.
இவ் வேளைத்திட்டம் நிறுவனத்தின் செயலாளர் ஐ.எம். றிஸ்வின் தலைமையில் தற்போது முன்னொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment