-
காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கள்
– அல் – மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: அல் மனார் நிறுவனத்தின் செயலாளர்நாயகம் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி), காத்தான்குடி மற்றும் அதன் அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் வெள்ளத்தினால் படும் இன்னல்கள் தொடர்பாக அல்மனார் நிறுவனத்தின் சமூக சேவைகள் பிரிவுக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கமைவாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக சமூக சேவை பிரிவுக்கு பொறுப்பான அஷ்ஷெய்க் எம்.பி.எம். சமீம் தெரிவித்தார்.
-
மஹிந்தவின் தேர்தல் பிரசாரத்தில் சிறார்கள்: தேர்தல் ஆணையரிடம் முறைப்பாடு!
கொழும்பு: ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது. தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் உருவப் படங்களை ஏந்துவதற்கும் கொடிகளை அசைப்பதற்கும் சிறார்கள் பயன்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்கள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன.
-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது வொலிவேரியன் மக்களுக்கு பைத்துல் ஹைர் பவுண்டேஷனின் நிவாரணப்பணி
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் சாய்ந்தமருது வொலிவேரியன் எகெட் சுனாமி வீட்டுத்திட்ட தொகுதி நீரில் மூழ்கியுள்ளதுடன் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதில் இவ்வீட்டுத்திட்டத்திலுள்ள 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இக்குடும்பங்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
-
“இரானுவத்தை கொண்டும் எமது வாக்குகளை தடுக்க சிலர் முற்படுகின்றதாக அறிகின்றோம்”: ரிஷாட்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: நாம் மானம் மறியதையுடன் வாழ வேண்டும்இமதச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் இதற்காக தான் எமது கட்சி இந்த முடிவை எடுத்தது பட்டம், பதவிகளை எமது கட்சி ஆசைப்பட்டிருந்தால் தற்போதுள்ள 62 அமைச்சுக்களில் எனக்கு வழங்கப்பட்டிருந்த பெரிய அமைச்சை கட்டி ஆழ்ந்திருக்கலாம் என்று கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,
-
ஜனாதிபதி மஹிந்தவின் வருகையினால் அழிவடைந்துள்ள சர்வதேச விளையாட்டு மைதானம்
காத்தான்குடி: காத்தான்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தை சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானமாக மாற்றுவதாகக்கூறி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பல மில்லியன் ரூபாய்களைக் கொண்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வந்தார்.
-
சாய்ந்தமருது பிரதேசத்தில் வெள்ள அனா்த்த்தினால் 2734 குடும்பங்கள் பாதிப்பு
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையினால் சாய்ந்தமருது பிரதேசத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது. இதனால் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ் வெள்ள அனர்த்தத்தினால் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் 2734 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
-
மைத்திரியை ஆதரித்து காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்,எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க 27-12-2014 இன்று சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். அங்கு விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமுறை மாற்றத்தில் பங்காளிகளாவோம் எனும் தொனிப்பொருளில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிரிசேனவை ஆதரித்து காத்தான்குடி
-
8 ஆம் திகதி நாம் எல்லோரும் நோன்பு நோற்றவர்களாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் – றிசாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா புல்மோட்டை: எப்போது ஜனாதிபதிக்கு பெரும்பான்மை அதிகாரம் கிடைத்ததோ அன்றிலிருந்து அவரது சிந்தனையும் செயற்பாடுகளும் மாற்றம் கண்டுவிட்டது. இதனால் சட்டமும் ஒழுங்கும் ஒருசாராரின் தேவைகளை நிறைவேற்றுபவைாயகவே இருந்தது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் புல்மோட்டையில் இன்று இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
-
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் இருக்கும் பொது மக்களை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டு உலர் உணவுப் பொதிகளை வழக்கி வைத்தார்
பழுலுல்லாஹ் பர்ஹான் வாகரை: மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கதிரவெளி விக்ணேஸ்வரா வித்தியாலத்திலுள்ள தற்காலிக முகாமில் இருக்கும் பொது மக்களை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 26-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.
-
திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்சி வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 192 திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்சி வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு 26-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் அறபா வித்தியாலத்தில் இடம்பெற்றது.
-
மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து புல்மோட்டையில் ஆரம்பமாகியுள்ள கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்
இர்ஷாத் றஹ்மத்துல்லா புல்மோட்டை: பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து புல்மோட்டையில் தற்போது ஆரம்பமாகியுள்ள கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் (வரலாறு காணாத அளவுக்கு) கலந்து கொண்டுள்ளதையும், முன்னால் எம்.பி மஹ்ருப், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி உட்பட அதிதிகளையும் இங்கு காணலாம்.
-
இதுவரை 155 அரசியல்வாதிகள் கட்சித் தாவியுள்ளனர்!!
கொழும்பு: ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் 25 நாட்களில் 155 அரசியல்வாதிகள் கட்சித் தாவியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டு, இந்த கட்சித் தாவல் நடவடிக்கையை ஆரம்பித்தார். இதுவரையில் 155 மக்கள் பிரதிநிதிகள் ஆளும் கட்சியுடனும் எதிர்க்கட்சியுடனும் இணைந்து கொண்டுள்ளனர்.