வாகரை: மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கதிரவெளி விக்ணேஸ்வரா வித்தியாலத்திலுள்ள தற்காலிக முகாமில் இருக்கும் பொது மக்களை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 26-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் மத்தியில் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறித்த மக்களுக்கு உடணடியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் 750 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
இவ் விஜயத்தில் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர். மனோஹிதராஜ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment