சாய்ந்தமருது பிரதேசத்தில் வெள்ள அனா்த்த்தினால் 2734 குடும்பங்கள் பாதிப்பு

sainthamaruthu (2)– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையினால் சாய்ந்தமருது பிரதேசத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது. இதனால் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ் வெள்ள அனர்த்தத்தினால் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் 2734 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

இதே சமயம் சாய்ந்தமருது வொலிவேரியன் எகெட் சுனாமி வீட்டுத்திட்ட தொகுதியிலுள்ள 66 குடும்பங்கள் இவ் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பொது இடங்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தற்காலிகமாக தங்கியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையினை சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள் மேற்கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அம்பறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.எம்.அமீர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனா்.

sainthamaruthu (2)

sainthamaruthu (3)

sainthamaruthu

Published by

Leave a comment