சாய்ந்தமருது: தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் சாய்ந்தமருது வொலிவேரியன் எகெட் சுனாமி வீட்டுத்திட்ட தொகுதி நீரில் மூழ்கியுள்ளதுடன் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதில் இவ்வீட்டுத்திட்டத்திலுள்ள 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இக்குடும்பங்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 66 குடும்பங்களைச் சோ்ந்த 281 பேருக்கு சமைத்த உணவுகளை பைத்துல் ஹைர் ஸ்ரீலங்கா நிறுவனம் இன்று வழங்கியது.
இதில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தா் எம்.எம்.உதுமாலெப்பை உள்ளிட்ட பைத்துல் ஹைர் பவுண்டேஷன் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.
பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கான சமைத்த உணவுகளை இந்நிறுவனத்தின் உறுப்பினா்கள் விநியோகிக்கும் கடமைகளில் மழையினைக் கூட பொறுப்படுத்தாமல் ஈடுபட்டனா்.
Published by



Leave a comment