காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கள்

almanar 1– அல் – மனார் ஊடகப்பிரிவு

காத்தான்குடி: அல் மனார் நிறுவனத்தின் செயலாளர்நாயகம் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி), காத்தான்குடி மற்றும் அதன் அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் வெள்ளத்தினால் படும் இன்னல்கள் தொடர்பாக அல்மனார் நிறுவனத்தின் சமூக சேவைகள் பிரிவுக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கமைவாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக சமூக சேவை பிரிவுக்கு பொறுப்பான அஷ்ஷெய்க் எம்.பி.எம். சமீம் தெரிவித்தார்.

இதன் நிமித்தம் முதற்கட்டமாக எழு நூறு குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் நேற்றைய தினம் (26.12.2014) வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

almanar 1

almanar

almanar2

Published by

Leave a comment