திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்சி வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

unnamed2பழுலுல்லாஹ் பர்ஹான்

ஏறாவூர்: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 192 திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்சி வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு 26-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் அறபா வித்தியாலத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எச். ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு மேற்படி 192 திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்சி வாழ்வாதார உதவிகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

இதன் போது 150 வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் குடி நீர் இணைப்பு பெறுவதற்கான காசோலை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏறாவூர் அறபா வித்தியாலத்தில் 660 ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்சி வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் தையல் இயந்திரமும், துவிச்சக்கர வண்டியும், ஆடு, கோழி வளர்ப்பதற்கான காசோலையும் அரிசி அரைக்கும் இயந்திரமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட தொகுதி இணைப்பாளர் எஸ்.எச். முஸம்மில், ஏறாவூர் அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எம்.எச்.எம். மாஹிர், முன்னாள் ஏறாவூர் நகர சபை உறுப்பினர் அப்துல் நாஸர், முன்னாள் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ். றவூப் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment