Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • போதைப்பொருள் கடத்தலில் முக்கிய அரசியல்வாதிகள்

    கொழும்பு: அண்மையில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட வெலே சுதா என்ற பாரிய போதைப் பொருள் வர்த்தகரிடம் நடத்திய விசாரணைகளின் போது இந்த விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கடந்த அரசாங்கத்தின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

  • “இலங்கைக்கு மீண்டும் வந்து மறுபடியும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை”:

    கொழும்பு: இலங்கைக்கு மீண்டும் வந்து மறுபடியும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்பதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரும், கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருமான பசில் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமெரிக்காவுக்கு தப்பியோடியுள்ளார்.

  • காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் 2015ம் ஆண்டு தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் 2015ம் ஆண்டு தரம் ஒன்றுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 20-01-2015 இன்று செவ்வாய்க்கிழமை மீரா பாலிகா தேசிய பாடசாலை விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

  • அல் மனார்: பகுதி நேர அல் குர்ஆன் ஹிப்ழ் பிரிவிற்கு விண்ணப்பங்கள் கோரல்

    – அல்-மனார் ஊடகப்பிரிவு  காத்தான்குடி: காத்தான்குடி, அல் மனார் நிறுவனத்தினால் பகுதி நேர புனித அல் குர்ஆன் ஹிப்ழ் பிரிவிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் பிற்பகல் 4.30 மணி தொடக்கம் 6.00 மணி வரையும் சனி, ஞாயிறு தினங்களில் காலை 6.00 மணி தொடக்கம் 8.00 மணி வரையும் இப்பகுதி நேர அல் குர்ஆன் மனன வகுப்பு இடம்பெறும்.

  • இன உறவை சீர் குலைக்கும் வகையில் ஒரு சிலர் செயற்படுவதாக நகர, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மக்களிடம் வேண்டுகோள்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: கடந்த பல வருடங்களுக்கு அப்பால் எமது நாட்டில் எற்பட்டுள்ள இன உறவை சீர் குலைக்கும் வகையில் ஒரு சிலர் செயற்படுவதாகவும் இவர்கள் தொடர்பில் எமது தமிழ் பேசும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட நகர, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கூட்டாக மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

  • மஹிந்தவின் உருவப்பட கடிகாரங்கள் நேற்று மீட்பு: சுங்கத்திணைக்களத்தின் ஊடாக கொண்டு வரப்பட்டதா?

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் பொறித்த 2500 கடிகாரங்கள் வீரகெட்டிய, இங்குருமூலன பகுதியில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை சப்புகஸ்கந்த களஞ்சியசாலையொன்றில் நேற்று முன்தினம் 68,000 கடிகாரங்கள் மீட்கப்பட்ட நிலையில் நேற்றும் 2500 கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன நேற்று தெரிவித்தார்.

  • மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர்கள், சர்வமதத் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் 172 வாகனங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர்கள், சர்வமதத் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் 172 வாகனங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. அவற்றை விரைவில் ஒப்படைக்குமாறும் அவ்வாறு மீறும் பட்சத்தில் திடீர் முற்றுகையின் மூலம் கைப்பற்றப்படும் என என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

  • மஹிந்த-சீன ஒப்பந்தங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன

    கொழும்பு: இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வடக்கு அதிவேக நெடுஞ்சாலை வேலைத்திட்டத்திற்கான செலவு விபரங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்துமுடியும் வரை, அந்த நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை இடைநிறுத்திவைப்பதற்கு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

  • கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம்: பேச்சுவார்த்தைகள் தோல்வி

    திருகோணமலை: கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. முதலமைச்சர் பதவி தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படாததே இந்த தோல்விக்குக் காரணம் என இரு தரப்பும் கூறுகின்றன.

  • இஸ்லாம் பிரிட்டிஷ் அடையாளத்தின் அங்கமா?

    லண்டன்: இஸ்லாம் எப்படி பிரிட்டிஷ் அடையாளத்தின் ஒரு அங்கமாக இருக்க முடியும் என்று விளக்குமாறு, பிரிட்டிஷ் முஸ்லீம்களை தனது அமைச்சர்கள் சிலர் கோரியிருந்ததை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் நியாயப்படுத்தியிருக்கிறார். இந்த அமைச்சர்கள் இந்த கோரிக்கையை ஒரு கடிதத்தில் முன் வைத்திருந்தனர்.

  • விசாரணைப் பொறிமுறைக்கு ஹிஸ்புல்லாஹ் ஒத்துழைத்தால் அவரது ஊழல் மோசடிகளை நிரூபிக்க முடியும்: ஊடகவியலாளர் சந்திப்பில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற ஊழல் மோசடி மற்றும் அதிகாரத்துஷ்பிரயோகங்களை உரிய முறையில் விசாரிப்பதற்கு  விஷேட உள்ளூர் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு அவர் ஒத்துழைத்தால் அவரது ஊழல் மோசடிகளையும் அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் நிரூபிக்க முடியும் என்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

  • காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 2015 – தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 2015ஆம் ஆண்டு  தரம் ஒன்றுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 19-01-2015 இன்று திங்கட்கிழமை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 550 551 552 553 554 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar