Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் தொகுதி முறையில் நடைபெறாது: மாவட்ட மட்ட முறையில் நடைபெறும்: ஹிஸ்புல்லாஹ்விடம் ஜனாதிபதி உறுதி மொழி

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னயின் கட்சி தலைவர்களுக்கான விஷேட கூட்டம் 19-01-2015 இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட கூட்டத்தில் கட்சித் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான சுசில் பிரேம ஜயந்த, டிவ் குணசேகர, தொண்டமான், அதாவுல்லாஹ், அனுர பிரியதர்சன யாப்பா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

  • பழைய மட்டக்களப்பு – கல்முனை வீதியின் விஸ்தரிப்பு பணிகளின் முதற்கட்டம் ஆரம்பம்: சட்டவிரோத கட்டிடங்கள், மதில்கள் காத்தான்குடி நகர சபையினால் உடைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மிக நீண்ட காலம் புனரமைப்பு செய்யப்படாமல் இருந்து வந்த பழைய மட்டக்களப்பு – கல்முனை வீதியின் வீதி விஸ்தரிப்பு பணிகளின் முதற்கட்டம் 19-01-2015 இன்று திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.

  • பசில் ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்படலாம்!

    கொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நாட்டில் சட்டவிரோதமாக சென்றிருப்பதால், அவர் எந்த சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த 11 ஆம் திகதி அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

  • “சமூகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இராஜினாமாக் கடிதங்களையாவது எழுதுகின்ற துணிச்சலோ, நேர்மையோ முஸ்லிம்தலைமைகளிடம் இருக்கவில்லை”: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

    திருகோணமலை: மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் மக்கள் தாங்க முடியாத துயரங்களையும், வேதனைகளையும் அனுபவித்தார்கள். அதன் காரணமாகவே முஸ்லிம் அரசியல்வாதிகளும் மஹிந்தவின் அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினார்கள். ஆனாலும், இறுதி நேரத்திலேயே மஹிந்தவின் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு முடிவெடுத்த முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் முஸ்லிம்களின் உணர்வுகளையும், வேதனைகளையும்

  • அல் மனார்: ஷரீஆ பிரிவிற்கு இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்கள் கோரல்

    – அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தொடராக விடுத்து வந்த வேண்டுகோளுக்கமைவாக எமது அல் மனார் நிறுவனம் ஷரீஆ பிரிவிற்கு இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்களை கோரியுள்ளதாக பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

  • ஹிஸ்புல்லாஹ் ஊழல் செய்துள்ளார்: நிருபிக்கிறார் அப்துர் றஹ்மான்-வீடியோ

    – முகம்மட் சஜீ காத்தான்குடி: நான் ஊழல் செய்திருந்தால் சிப்லி, முபீன், றஹ்மான் எவராவது நிருபிக்கட்டும் ஹிஸ்புல்லாஹ் கேள்வி? எனும் செய்திக்கு ந. தே. மு. தவிசாளர் அப்துர் றஹ்மான் முன்னால் பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாஹ் ஊழல் செய்துள்ளார் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கிறார்.

  • கிழக்கு முதலமைச்சர் விவகாரம்: ஜனாதிபதியுடன் ரி.என்.ஏ இன்று பேச்சு

    கொழும்பு: கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட புதிய ஆட்சி அமைப்பு விவகாரம் தொடர்பாக இன்று 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரட்ணம் தெரிவித்தார்.

  • காலி துறைமுக கப்பலினுள் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

    காலி: காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலொன்றுக்குள்ளிருந்து பொலிஸார் பெருமளவிலான ஆயுதங்களை நேற்று கைப்பற்றியுள்ளனர். ‘அவன்த் கார்டே’, எனப்படும் பாதுகாப்பு சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலையாக குறித்த கப்பல் செயற்பட்டு வருகின்றமை ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

  • முன்னாள் பிரதமரின் மகன் உட்பட ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை

    கொழும்பு: ஜனாதிபதித் தேர்தல் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்னவின் புதல்வர் உட்பட ஐவருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தினத்தின் போது பொது வேட்பாளரின் காரியாலயம் ஒன்றைத் தாக்கியது, அனுமதியின்றி உட்பிரவேசித்தமை, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை என்பவை தொடர்பாக

  • கடந்த 9ம் திகதி அலரி மாளிகைக்குள் வந்த நபர்கள் யார்?

    கொழும்பு: கடந்த 9 ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் தினத்துக்கு அடுத்த நாள் அதிகாலை அலரி மாளிகையில் யார்? யார் பிரசன்னமாகியிருந்தனர் என்பதை கண்டறியும் நோக்கில் அங்கிருந்து சிசிடிவி கமெராக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த கமெராக்களின் படப்பிடிப்புக்களை ஆராயவுள்ளனர்.

  • ஒருநாள் போட்டியில் வேகச் சதம்: ஏ.பி. டி வில்லியர்ஸ் சாதனை! (காணொளி)

    ஜொஹன்னெஸ்பேர்க்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் வேகமாக 100 ஓட்டங்களைக் குவித்த சாதனையை தென்னாப்பிரிக்க அணிவீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலைநாட்டியுள்ளார். ஜொஹன்னெஸ்பேர்க் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 31 பந்துகளில் டி வில்லியர்ஸ் இந்த சதத்தை நிகழ்த்தினார்.

  • சாய்ந்தமருதில் ‘கல்விக்கு உரமிடுவோம்’ வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது 15ம் பிரிவு கல்வி அபிவிருத்தி மையம் மற்றும் மாற்றத்திற்கான பங்காளி ஆகிய அமைப்புக்கள் இணைந்து ‘கல்விக்கு உரமிடுவோம்’ திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது 15ம் கிராம சேவக பிரிவிலுள்ள வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (18) சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 551 552 553 554 555 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar