காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் 2015ம் ஆண்டு தரம் ஒன்றுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 20-01-2015 இன்று செவ்வாய்க்கிழமை மீரா பாலிகா தேசிய பாடசாலை விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இவ் வரவேற்பு நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.இஸ்ஸதீன் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.இப்றாஹீம்,காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.சீ.எம்பதுர்தீன்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது 2015ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் தரம் இரண்டு மாணவர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புப் பண்டங்கள் வழங்கி வரவேற்க்கப்பட்டனர்.
இங்கு காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவ ,மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை,கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment