காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 2015 – தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

unnamed1பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 2015ஆம் ஆண்டு  தரம் ஒன்றுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 19-01-2015 இன்று திங்கட்கிழமை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் மௌலவிய்யா நயீமா அப்துல் சலாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முறைசாரக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஷரீப், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ. இப்றாஹீம், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின தலைவர் எம்.ஐ.எம்.சுபைர், முன்னாள் பிரதேச கல்வி பணிப்பாளர் சுபைர், ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் வித்தியாகீர்த்தி எம்.எம்.அமீர் அலி, பாடசாலை அபிவிருத்திக்குழு, பாடசாலை அபிவிருத்தி உதவிக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது 2015ஆம் ஆண்டு  தரம் ஒன்றுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் தரம் இரண்டு மாணவர்களினால் இனிப்பு பண்டங்கள் வழங்கி வரவேற்க்கப்பட்டனர்.

இங்கு ஸாவியா மகளிர் வித்தியாலய மாணவ, மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேற்றப்பட்டன.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment