காத்தான்குடி: காத்தான்குடி, அல் மனார் நிறுவனத்தினால் பகுதி நேர புனித அல் குர்ஆன் ஹிப்ழ் பிரிவிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் பிற்பகல் 4.30 மணி தொடக்கம் 6.00 மணி வரையும் சனி, ஞாயிறு தினங்களில் காலை 6.00 மணி தொடக்கம் 8.00 மணி வரையும் இப்பகுதி நேர அல் குர்ஆன் மனன வகுப்பு இடம்பெறும்.
அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த, தரம் 5 பாடசாலைக் கல்வியில் சித்தியடைந்த மாணவர்கள் இப்பிரிவிற்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப படிவங்களை அல் மனார் நிறுவன வளாக கீழ் தளத்தில் இயங்கும் பள்ளிவாயலில் இலவசமாக பெற்று கொள்ள முடியும்.
விண்ணப்ப முடிவு திகதி 31/01/2015
Published by

Leave a comment