இஸ்லாம் பிரிட்டிஷ் அடையாளத்தின் அங்கமா?

david_cameronலண்டன்: இஸ்லாம் எப்படி பிரிட்டிஷ் அடையாளத்தின் ஒரு அங்கமாக இருக்க முடியும் என்று விளக்குமாறு, பிரிட்டிஷ் முஸ்லீம்களை தனது அமைச்சர்கள் சிலர் கோரியிருந்ததை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் நியாயப்படுத்தியிருக்கிறார். இந்த அமைச்சர்கள் இந்த கோரிக்கையை ஒரு கடிதத்தில் முன் வைத்திருந்தனர்.

இந்தக் கடிதம் இயல்பானது மற்றும் மிதமானதுதான் என்று கேமரன் வர்ணித்திருக்கிறார். ஆனால் இந்தக் கடிதம் பள்ளிவாயல்களில் தீவிரவாதம் இருக்கிறது என்று சூசகமாகப் பழிபோடுவதாகவும், முஸ்லீம்கள் தங்கள் பெயரால் நடக்கும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள போதிய அளவு செய்யவில்லை என்றும் கூறுவதுபோல் இருப்பதாக பிரிட்டிஷ் முஸ்லீம் கவுன்சில் கூறியிருக்கிறது.

Muslims give flowers

Published by

Leave a comment