Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • றிசாத் பதியுதீனுக்கு வன்னி மாவட்ட மக்கள் மாபெரும் வரவேற்பு ஏற்பாடு

    இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் முல்லைத்தீவு: நடை பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் மீண்டும் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிசாத் பதியுதீன் அவர்களுக்கு வன்னி மாவட்ட மக்கள் மாபெரும் வரவேற்பு வைபவங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

  • “டிவிலியர்ஸ் சாதனையை முறியடிக்க முயற்சி செய்வேன்”: அப்ரிடி

    லாஹூர்: டிவிலியர்ஸ் 31 பந்துகளில் ஒருநாள் போட்டியில் சதம் எடுத்த உலக சாதனையை முறியடிக்க முயற்சி செய்வேன் என்கிறார் பாக்கிஸ்தான் சகலதுறை வீரரும் நம்பிக்கை நட்சத்திரமுமான அப்ரிடி. உலகக்கோப்பை போட்டிகளிலோ அல்லது நியுசிலாந்துக்கு எதிரான தொடரிலோ அதிவேக ஒருநாள் போட்டிக்கான தற்போதைய டிவிலியர்ஸின் சாதனையை முறியடிக்க முயற்சி செய்யப்போவதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.

  • புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விபரம்

    கொழும்பு: அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் ஒரு ராஜாங்க அமைச்சரும் 4 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் நேற்று பிற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

  • மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியப் பொலிஸ் அதிகாரி அவுஸ்திரேலியாவில் கைது

    சிட்னி: மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பின் , நாட்டிலிருந்து தப்பியோடிய மலேசியப் பொலிஸ் அதிகாரி ஒருவர் அவுஸ்திரேலியப் போலிசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. இந்தப் பொலிஸ் அதிகாரி மங்கோலியப் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

  • சரத் பொன்சேகாவுக்கு முழு மன்னிப்பு

    கொழும்பு: முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ரத்துசெய்து அவருக்கு முழு மன்னிப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருக்கிறது. போரின் இறுதிக்காலத்தில் இலங்கை ராணுவத்துக்கு தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, போர் முடிந்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முரண்பட்டு, 2010ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளராக மஹிந்தவுக்கு எதிராகப் போட்டியிட்டார்.

  • “மக்களின் வாழ்க்கைச் சுமையினை கருத்திற்கொண்டு வரி அதிகரிப்பினை மீள்பரிசீலனை செய்யவும்”: தவிசாளரிடம் காத்தான்குடி ஊடகவியளார்கள் வேண்டுகோள்

    – எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பகுதியில் இவ்வருடத்திற்கான வரி மதிப்பீடு கணிசமாக அதிகரித்துள்ளது தொடர்பாகவும், இதனால் வரியிறுப்பாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாவதாகவும், இதனைக்குறைப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளதா என ஊடகவியலாளர் மாநாட்டின்போது காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ் எச் அஸ்பரிடம் வினவப்பட்டது.

  • ஒற்றையாட்சிக்குள்ளேயே தேசிய பிரச்சினைக்கு தீர்வு: பிரதமர் ரணில் தெரிவிப்பு

    கொழும்பு: இலங்­கையின் தேசிய பிரச்­சி­னைக்கு இந்தப் பாராளுமன்றத்திற்குள் ஒற்­றை­யாட்­சிக்­குள்­ளேயே தீர்வு காணப்­படும். 13 ஆவது திருத்­தமும் ஒற்­றை­யாட்­சிக்­குள்­ளேயே உள்ளடக் கப்பட்டிருக்கின்றது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று செவ்வாய்க்­கி­ழமை சபையில் தெரி­வித்தார்.

  • கிழக்கில் முதலமைச்சர் பதவிக்காக சமூகங்களுக்கிடையே விரிசலை தோற்றுவிக்காதீர்: சமயங்களுக்கிடையிலான கருத்தாடல் மையம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி புதிய முதலமைச்சரை நியமிப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடையே ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான இழுபறி நிலையை தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான முறுகலாக காண்பிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக சமயங்களுக்கிடையிலான கருத்தாடல் மையம் தெரிவித்துள்ளது.

  • பிரபல சமூக சேவையாளர் அபூபக்கர் சாஹிப் காலமானார்

    பைரூஸ் முஹமட் ஹுனுப்பிட்டி: பிரபல சமூக சேவையாளரும் ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் முக்கியஸ்தருமான அபூபக்கர் சாஹிப் இன்று புதன்கிழமை ராகம வைத்தியசாலையில் காலமானார்.

  • அமைச்சுக்களின் செயலாளாராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இரண்டு முஸ்லிம் உயர் அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் பாராட்டு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உல்லாசப் பயணத்துறை விளையாட்டு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த எம்.ஐ.எம். றபீக்கும் முஸ்லிம் சமய தபால் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏறாவூரைச் சேர்ந்த அப்துல் மஜீட்டுக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  • அலரிமாளிகையில் பயன்படுத்தப்பட்டுள்ள புலிகளின் வாகனங்கள்

    கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் ஜனாதிபதி மாளிகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட போரின் பின்னர் மீட்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான பல அதி சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன.

  • மஹிந்தவின் அரசாங்கத்தில் 8000 கோடி ரூபாய்களை, மோசடி செய்த 20 அமைச்சர்கள்

    கொழும்பு: மகிந்த ராஜபக்ச அரசில் இருந்த 20 அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் 8000 கோடி ரூபா மோசடி செய்திருப்பதற்கான ஆவணங்களும் சாட்சியங்களும் கிடைத்திருப்பதால் அவர்கள் தொடர்பில் அடுத்த வாரத்தில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவிருப்பதாக அமைச்சுச் செயலாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

←Previous Page
1 … 548 549 550 551 552 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar