Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸின் மறைவுக்கு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பு (காணொளி)

    முகம்மட் சஜீ / பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சவூதி நாட்டின் உதவியுடன் பல்வகையான வேலைத் திட்டங்களை இலங்கையில் மேற்கொள்வதற்கு மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் உதவியாக இருந்ததாகவும் குறிப்பிட்ட முன்னால் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மறைந்த மன்னரின் மறுவுலக வாழ்வுக்காக பிராத்திப்பதாகவும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார். 

  • கட்சி தாவல் என்பதற்கு இடமே இல்லை: பொறியிலாளர் சிப்லி பாறூக்

    SHM காத்தான்குடி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து கொண்டே நான் எனது அரசியல் நடவடிக்கைகளை மேற் கொள்வேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் சிப்லி பாறூக் உறுதியாக தெரிவித்தார். 

  • உலமாக்களுக்கான ஒன்று கூடல்

    அல்-மனார் ஊடகப் பிரிவு காத்தான்குடி: எமது அல்-மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் அணுசரனையுடன் எமது காத்தான்குடி உலமாக்களுக்கான ஒன்று கூடல் ஒன்றை எதிர்வரும் 25.01.2015 அன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி) தெரிவித்தார்.

  • ‘புதிய அரசியல் சூழ் நிலையில் நாம் நிறைவேற்ற வேண்டிய தேசியக் கடமையொன்றும் சமூகக் கடமையொன்றும் இருக்கின்றது’: அக்கரைப்பற்றில் NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

    NFGG ஊடகப்பிரிவு அக்கரைப்பற்று: ‘இன்று நாட்டில் ஏற்பட்டிருப்பது ஒரு மாற்றம் என்பதை விடவும் ஒரு மாற்றத்திற்கான தொடக்கம் என்று கூறுவதே பொருத்தமானதாகும். இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் முன்னால் இரண்டு கடமைகள் இருக்கன்றன. அதிலொன்று தேசியக் கடமையாகும், மற்றையது சமூகக் கடமையாகும்’ என NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

  • மஹிந்தவின் சிபார்சில் இலங்கை வங்கியில் கடன்பெற்ற 19,000 மில்லியன் இன்னும் செலுத்தப்படவில்லை!

    கொழும்பு: இலங்கை வங்கியில் கடனாக பெற்ற ரூபாய் 193,757,482,076 இன்று வரை மீள் செலுத்தாது இருப்பதாக பாராளுமன்ற பொதுக்குழு தெரிவிக்கின்றது. இந்த தொகைகளை கடனாக அரச வங்கியான இலங்கை வங்கியில் பெற்றுக் கொள்ள முன்னைய ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவே அனுமதி அளித்துள்ளார்.

  • ஐ.எஸ். அரசுக்கு உதவ முயன்ற அமெரிக்க முஸ்லிம் பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

    நியுயோர்க்: இஸ்லாமிய அரசக்கு உதவும் நோக்கில் சிரியாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்த ஒரு பெண்ணுக்கு அமெரிக்காவின் டென்வர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.கடந்த ஆண்டு ஜெர்மனி செல்லும் விமானத்தில் ஏறத் தயாராகிக் கொண்டிருந்த 19 வயதான ஷனான் கனோலியை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் முஸ்லீமாக மதம் மாறியவர்.

  • 40 அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டு

    கொழும்பு: கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 40 அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதனைத் தொடர்ந்து 40 அரசியல்வாதிகள் தொடர்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் பெப்ரவரி 8ஆம் திகதி ஆரம்பம்: தென்னாபிரிக்காவை சந்திக்கிறது இலங்கை

    மெல்போன்: உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியுசிலாந்தில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் பெப்ரவரி 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடக்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

  • “புதிய முறையில் தேர்தலை நடத்த மூன்று மாதகால அவகாசம் தேவை”

    கொழும்பு: பாராளுமன்ற தேர்தல் முறை மாற்றப்படுவதை வரவேற்கிறேன். புதிய முறையின் கீழ் தேர்தல் நடத்துவதனால் எமக்கு 3 மாத கால அவகாசம் தேவை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2016 ஏப்ரல் மாதமே நிறைவடைகிற போதும் ஜனாதிபதிக்கு எந்த நிமிடமும் தேர்தல் நடத்த முடியும்

  • “பொருட்களின் விலைகளைக் குறைத்து புதிய வரி அமுலாகும் என்பது தவறு”

    “கோத்தபாயாவுக்கு செலுத்தப்பட்ட 2100 கோடி ரூபாவை நாம் மீண்டும் திறைசேரிக்கு எடுத்திருக்கிறோம்” கொழும்பு: எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளும் குறைக்கப்படவுள்ளன. இவ்வாறு விலை குறைக்கப்பட்டாலும் மறுபக்கத்தால் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரிக்கவிருப்பதாக கூறப்படும் கருத்துக்களில் எதுவித உண்மையும் இல்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

  • மன்னர் அப்துல்லாஹ்வின் ஜனாஸா தொழுகை (வீடியோ)

  • “மன்னர் மாறினாலும் கொள்கை மாறாது”: புதிய மன்னர் சல்மான்

    றியாத்: சவுதி அரேபியாவின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள சல்மான் பின் அஸீஸ் அல் சௌத், மறைந்த மன்னரின் கொள்கைகளையே தான் பின்பற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் வெள்ளிக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரம் ஒரு மணிக்கு காலமானதாக அரச தொலைக்காட்சி அறிவித்தது.

←Previous Page
1 … 545 546 547 548 549 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar