கட்சி தாவல் என்பதற்கு இடமே இல்லை: பொறியிலாளர் சிப்லி பாறூக்

sibly farookSHM

காத்தான்குடி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து கொண்டே நான் எனது அரசியல் நடவடிக்கைகளை மேற் கொள்வேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் சிப்லி பாறூக் உறுதியாக தெரிவித்தார். 

எனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு பட்ட விடயங்கள் ஊடகங்களின் வந்திருப்பதை நான் அறிந்தேன். என்னால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் கட்சி தாவல் என்பதற்கு என்னிடத்தில் இடமே இல்லை. கௌரவ அமைச்சர் றிசாத் பதியதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து கொண்டே நான் எனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற் கொள்வேன் என இன்று இடம் பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆட்சியில் சுமார் 60 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல், மோசடி, சுரண்டல்கள் இடம் பெற்றுள்ளன. இவைகள் யாவும் இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் செய்த மிகப் பாரிய துரோகமாகும. நாட்டில் இடம் பெற்றுள்ள ஊழல் மோசடி தொடர்பாக மிக விரைவில் விசாரனைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. தாங்களும் ஊழல் விசாரனைகளில் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தின் காரணமாகவே முன்னால் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் மைத்திரி அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

நாங்கள் ஊழல் செய்திருந்தால் ஆதாரங்களோடு வெளிக் கொண்டு வாருங்கள் என முன்னால் பிரதி அமைச்சர் தெரிவித்திருந்ததினை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். ஊழலினை வெளிக் கொண்டு வருவது என்பது ஒரு பெரிய விடயமல்ல. அவ்வாறு ஊழலை வெளிக் கொண்டு வருகின்ற சந்தர்பத்தில் ஊர் மட்டத்தில், மாவட்ட மட்டத்தலும் தலைவர்கள், பல அரச அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் என பலரும் பல அசௌகரியங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் என நினைக்கின்றேன்.

முன்னால் பிரதி அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகத்திக்கு மிகப் பெரிய ஆதாரம் தான் காத்தான்குடி தள வைத்திய சாலையில் கடமை செய்ய வேண்டிய நபர்களை தன்னுடன் வைத்துக் கொண்டு அவர்கள் கடமைக்கு செல்லாது சம்பளம் எடுக்கும் செயல்பாடாகும். மிக மோசமான அதிகார துஸ்பிரயோகம், ஊழல் நடக்கின்றது என நான் பல கூட்டங்களில் சொல்லி இருக்கின்றேன். ஊர்த் தலைமைகள், உலமாக்கள், புத்தி ஜீவிகள், ஏனையவர்கள் சேர்ந்து ஊர்மட்டத்தில் ஓர் கூட்டத்தை ஏற்பாடு செய்தால் அங்கு அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான பல விடயங்களை நான் தெளிவு படுத்துவேன் என்றார் பொறியிலாளர் சிப்லி பாறூக்.

மேலும் பணங்களை, பொருட்களை கொடுத்து வாக்குகளை கேட்கின்ற மிக மோசமான செயற்பாடகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். வெறும் உதவிக்காக வாக்களிப்பது என்பது சமூகத்தை புதை குழியில் தள்ளிவிடுகின்ற செயல்பாடாகும் என்றும் தெரிவித்தார்.

முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஊழலை நிருபிப்பதாக நான் எங்கும் சென்னது கிடையாது. அவ்வாறான தேவைப்பாடும் எனக்கில்லை. மாறாக அவ்வாறான செயல்பாடுகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னனி முன்னெடுப்பதாக நான் அறிந்தேன். அது அவர்களுடைய நிலைப்பாடாகும் எனத் தெரிவித்தார்.

நூறு வீதம் இஸ்லாமிய அகீதாவுக்கு உட்பட்ட வகையில் அரசியல் செய்ய ஆசைப்படும் சிப்லி பாறூக் முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் செயல்பாடுகள் எனக்கு ஒத்துப்போக வில்லை என்பதற்காகவே நான் அவரை விட்டு பிரிந்து வந்தேன் என்கின்ற அதே நேரம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திளும் இனைய மாட்டேன் என்றும் சொல்லிக்கொண்டு சத்தமில்லாத யுத்த மென்றை செய்து வருகின்றார் பெறியியலாளர் சிப்லி பாறூக்.

பொறுத்திருந்து பார்ப்போம்…….?

sibly farook

Published by

One response to “கட்சி தாவல் என்பதற்கு இடமே இல்லை: பொறியிலாளர் சிப்லி பாறூக்”

  1. Idadhu Pakkaththi Irukkum Dh**di Vaalaa Yaaru, puthiya Amaippaalaraaa?

Leave a comment