உலமாக்களுக்கான ஒன்று கூடல்

almanarஅல்-மனார் ஊடகப் பிரிவு

காத்தான்குடி: எமது அல்-மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் அணுசரனையுடன் எமது காத்தான்குடி உலமாக்களுக்கான ஒன்று கூடல் ஒன்றை எதிர்வரும் 25.01.2015 அன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி) தெரிவித்தார்.

எமது அல்-ராஷித் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சவூதி அரேபிய நாட்டில் இருந்து வருகை தந்துள்ள பத்வா குழு உறுப்பினர் கலாநிதி அஷ்ஷெய்க் உமர் இப்னு சுஊத் அல்-ஈத் அவர்களும் அவர்களுடன் வருகை தந்துள்ள குழுவினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்வொன்று கூடலில் காத்தான்குடி மற்றும் அதை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த அனைத்து உலமாக்களும் கலந்து கொண்டு பயனடையவேண்டும் எனவும்  அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி) குறிப்பிட்டார்.

Published by

Leave a comment