ஐ.எஸ். அரசுக்கு உதவ முயன்ற அமெரிக்க முஸ்லிம் பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

isisநியுயோர்க்: இஸ்லாமிய அரசக்கு உதவும் நோக்கில் சிரியாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்த ஒரு பெண்ணுக்கு அமெரிக்காவின் டென்வர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.கடந்த ஆண்டு ஜெர்மனி செல்லும் விமானத்தில் ஏறத் தயாராகிக் கொண்டிருந்த 19 வயதான ஷனான் கனோலியை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் முஸ்லீமாக மதம் மாறியவர்.

பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு உதவ சதி புரிந்த குற்றச்சாட்டை கானோலி நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். மேலும், தன்னைக் கைது செய்ததன் மூலம் தனது உயிரை அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுத் துறை காப்பாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிரியாவிலும், மத்திய கிழக்கின் பிற நாடுகளிலும் நடக்கும் போர்களில் பங்கு பெற மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் செல்வது பாதுகாப்பு தொடர்பான கவலைகளை எழுப்பியுள்ளது.இவ்வாறு செல்பவர்களைத் தடுத்து நிறுத்த ஐரோப்பிய நாடுகளும் தற்போது முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன.

isis
ஷனான் கனோலி

Published by

Leave a comment