Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவின் கடவுச் சீட்டு முடக்கம்

    கொழும்பு: முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு மூன்று மாதங்களுக்கு முடக்கப்பட்டுள்ளது என இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் பாலபெட்டபெந்தி தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழங்கிய பணிப்பின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • ஆறு உலகக் கிண்ணப்போட்டிகளில் விளையாடியுள்ள ஜாவிட் மியன்டாட் மற்றும் டென்டுல்கர்

    டுபாய்: உலக கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தானை சேர்ந்த ஜாவிட் மியன்டாட், மற்றும் இந்தியாவைச் சேர்ந்த டெண்டுல்கர் ஆகியோர் அதிகபட்சமாக 6 உலக கோப்பையில் விளையாடி உள்ளனர். மியன்டாட் 1975-ம் ஆண்டு உலககோப்பையில் அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு 18 வயதாகும். 1979, 1983, 1987, 1992, 1996 ஆகிய உலககோப்பையிலும் அவர் விளையாடி உள்ளார்.

  • கணிதபாட சித்திகளை அதிகரித்துக் காண்பிக்க மஹிந்த அரசில் முறைகேடு

    “35 புள்ளிகள் அடைவு மட்டத்தை சுமார் 18 புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக அறிகிறோம்” கொழும்பு: உயர்தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளவர்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் காண்பிப்பதற்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு கடந்த அரசு காலத்தில் அரசியல் தலையீடுகள் ஏற்படுத்தப்பட்டதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

  • புலிகளிடம் கைப்பற்றிய ஆயுதங்களை விற்று, ஆயுத வியாபாரம் மேற்கொண்ட கோத்தாவின் ரகசியம் அம்பலம்!

    கொழும்பு: இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு நெருக்கமானவர்களால் நடத்தப்படும் ‘எவண்ட் காட்’ பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச கடலில் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.சர்வதேச கடலில் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தின் மூலம் இந்த ஆயுத விற்பனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோத்தாவின் மற்றுமொரு ரகசியம் அம்பலமாகியுள்ளது.

  • 100 கிலோ தங்கத்தை விற்கும் முயற்சி: ஷிரந்தி மீது குற்றச்சாட்டு

    கொழும்பு: இலங்கையின் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்த முன்னாள் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் மனைவி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மீது பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

  • வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் 5000 விமான சேவைகள் ரத்து

    லண்டன்: வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் 5000க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அங்கு சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளதை அடுத்தே இந்த அளவுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • “உள்ளூர் விசாரணை பொறிமுறையொன்றுக்கு உடன்பட ஏன் ஹிஸ்புல்லாஹ் தயங்குகின்றார்..?” NFGG கேள்வி! பதிலளிப்பதற்கு ஒருவார காலக்கேடு!!

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: ‘ஊழல் மோசடிகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விசாரணைகளை உள்ளூர் பொறிமுறையொன்றின் மூலம் மேற்கொள்வதற்கு முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தயங்குவது ஏன்..?’ என NFGG கேள்வி எழுப்பியுள்ளது.

  • போலி தொலைபேசி அழைப்பால் ஏமாற்றப்பட்டார் பிரிட்டிஷ் பிரதமர்

    லண்டன்: பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரன் போலி தொலைபேசி அழைப்பு ஒன்றால் ஏமாற்றப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று கூறியுள்ளார்.மிக உயர்மட்ட கூட்டுத் தொலைபேசி உரையாடல் என்று கூறப்பட்டு அந்த அழைப்பு அவருக்கு சென்றது.

  • “கடந்த 9 ஆம் திகதி நாம் இந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்று இருப்போமெனில் எமது சமூகத்தின் தலைவிதி மாறியிருக்கும்”

    – முசலியில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா முசலி: கடந்த 9 ஆம் திகதி நாம் இந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்று இருப்போமெனில் எமது சமூகத்தின் தலைவிதி மாறியிருக்கும் நாம் எங்கே போயிருப்போம் என்று தெரியாது என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீர் அலி எமது கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் சமூகத்தின் தேசிய சொத்து என்றும் கூறினார்.

  • அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு முசலி பிரதேச மக்கள் வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு

    – முசலியில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: இலங்கை அரசியலில் புரட்சிகரமான பணியினை ஆற்றியதுடன்,கடந்த காலத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அனைத்து விதமான சதி நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து சிறுபான்மை மக்களையும் ஓரணியில் இணைத்துக் கொண்டு புதிய ஆட்சி மாற்றத்திற்கான பங்காளியாக பரிணமித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில் வணிகத் துறை ,

  • “காலம் கடந்தேனும் முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”

    காத்தான்குடி: காலம் கடந்தேனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக முன்னால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் NK றம்ழான் தெரிவித்தார். இவ்வாறு காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பின் போது உரையபற்றுகையில் தெரிவித்தார்.

  • மாத்தறையில் மங்கள சமரவீரவுக்கு பொன்னாடை போர்த்திய முஸ்லிம்கள்

    பைரூஸ் முஹம்மட் மாத்தறை: அண்மையில் மாத்தறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வொன்றில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டார். இதன்போது அங்குள்ள முஸ்லிம் மக்களால் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டது.

←Previous Page
1 … 542 543 544 545 546 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar