கொழும்பு: முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு மூன்று மாதங்களுக்கு முடக்கப்பட்டுள்ளது என இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் பாலபெட்டபெந்தி தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழங்கிய பணிப்பின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்தானந்த அளுத்கமகே மீது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment