“காலம் கடந்தேனும் முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”

ramlanகாத்தான்குடி: காலம் கடந்தேனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக முன்னால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் NK றம்ழான் தெரிவித்தார். இவ்வாறு காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பின் போது உரையபற்றுகையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மத்திய அரசில் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும் கிழக்கு மாகாணத்தில் இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டிருந்தது இதில் கட்சியின் தேசியத் தலைவருக்கு வழங்கப்பட்ட அமைச்சியானது நீதியமைச்சுப் பதவியாகும் அதனைக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய அபிவிருத்தி வேலைகளையோ அல்லது உயர் அரச பதவிகளையோ அல்லது அதிகவிலான வேலை வாய்புக்களையோ வழங்க முடியாதிருந்தது என்பதை எல்லோரும் அறிந்த உண்மையாகும் அதிலும் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் முஸ்லிம் சமூகத்திற்கு எதனையும் செய்து விடக் கூடாது என்பதில் ராஜபக்ஸ அரசாங்கம் மிகவும் விழிப்பாக இருந்தது.

அத்துடன் தலைவர் அவர்களுக்கும் அனைத்து முஸ்லிம் பிரதேசங்களையும் பாகுபாடின்றி கவனிக்க வேண்டிய பாரிய போறுப்பும் இருந்தது அவ்வாரான ஒரு சூழ்நிலையிலும் காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், பாலமுனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுத்திருந்தார் அதற்கு காலம் கடந்தேனும் தலைவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ramlan
NK.  றம்ழான்

ஏனைய மத்திய அரசாங்கத்தின் அமைசுப்பதவிக்கு ராஜபக்ஸ அரசாங்கத்தின் முழுமையான ஆசிர்வாதங்கள் இருந்த போதிலும் அவ்வமைச்சினுடாக எதனையும் முஸ்லிம் சமூகத்திற்கு செய்யதாக காணமுடியவில்லை.

அத்தோடு குறித்த அமைச்சியினுடாக சில வேலைவாய்புக்கள் வழங்கப்பட்ட போதிலும் அவ்வேலை வாயப்புக்களில் அவ்வமைச்சரினால் காத்தான்குடியும் அதனை அன்டிய முஸ்லிம் பிரதேசங்களும் முழுமையாக புரக்கணிக்கப்பட்டிருந்தது ஆனால் இம்மக்கள் அவ்வமைச்சரின் வெற்றிக்கு வாக்களித்திருந்தார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அதே போன்று முஸ்லிம் காங்கிரசிக்கு கிழக்கு மாகாணத்தில் முக்கியமான இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டது அதில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைத்தது அந்த அமைச்சியைக் கொண்டு முஸ்லிம் சமூகம் எதுவித பயனையும் அடையவில்லை அதற்கு அப்பால் முஸ்லிம் காங்கிரஸிக்காக மட்டக்களப்பு மாவட்டதிற்கென குறித்த அமைச்சரிடம் 120க்கும் மேற்பட்ட பாடசாலை சிற்றூழியர் நியமணங்கள் ஒப்படைக்கப்பட்டு வழங்கப்பட்டது இதில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவருக்கேனும் வழங்கப்படவில்லை இவ்வமைச்சருக்கும் காத்தான்குடி மக்கள் மாகாண சபைத் தேர்தலின் போது கனிசமான வாக்குகளை வழங்கியிருந்தார்கள்.

இவ்வாறு மட்டக்களப்பு மத்திய மற்றும் மாகாண அமைச்சர்களால் காத்தான்குடி மற்றும் அதனை அன்டிய முஸ்லிம் பிரதேச மக்கள் புரக்கனிக்கப்பட்ட போதிலும் கட்சியின் தேசியத் தலைவர் எம்மை ஒரு போதும் புரக்கனிக்கவில்லை அதற்காக நாங்கள் நன்றி செலுத்த வேண்டும்.

ஏதிர் வரும் பாராளமன்றத் தேர்தலில் எமது கட்சிக்கு கனிசமான வாக்குகளை பெற்றாக வேண்டும் அதற்காக நாங்கள் ஒற்றுமையாக செயற்பட்டு ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸை குறிப்பிட்ட இக்காலப்பகுதிக்குள் கட்டியெழுப்ப நீங்கள் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ULMN முபீன், முன்னால் காதான்குடி நகரபிதா மர்சூக் அகமட்லெவ்வை, முன்னால் ஆறையம்பதி பிரதேச சபை உறுப்பினர் மதீன், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா ஆகியோர் கலந்து கொண்டனர்

Published by

Leave a comment