டுபாய்: உலக கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தானை சேர்ந்த ஜாவிட் மியன்டாட், மற்றும் இந்தியாவைச் சேர்ந்த டெண்டுல்கர் ஆகியோர் அதிகபட்சமாக 6 உலக கோப்பையில் விளையாடி உள்ளனர். மியன்டாட் 1975-ம் ஆண்டு உலககோப்பையில் அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு 18 வயதாகும். 1979, 1983, 1987, 1992, 1996 ஆகிய உலககோப்பையிலும் அவர் விளையாடி உள்ளார்.
டெண்டுல்கர் 1989-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். 1992-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பையில் அவர் முதல் முறையாக விளையாடினார். அப்போது அவருக்கு 19 வயதாகும். அதை தொடர்ந்து டெண்டுல்கர் 1996, 1999, 2003, 2007, 2011 ஆகிய உலககோப்பையில் விளையாடி உள்ளார்.
Published by


Leave a comment