பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 27 பேருக்கு பிணை

politicsகொழும்பு: நீதிமன்ற உத்தரவையும் மீறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பிக்குகள் உட்பட 27 பேர் நேற்று தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் தனிநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் நேற்று (08) சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே அனைவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா தனிநபர் பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத் திருந்தது. இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஆர்ப்பாட்டம் செய்ய அழைப்பு விடுத்திருந்தனர்.

politics

இது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பொலிஸார் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பெற்று அதனை உரியவர்களுக்கு அறிவித்தனர்.எனினும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதால் பொலிஸார் அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்ததோடு 27 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.

அதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, ஜானக பிரியந்த பண்டார, சரத் வீரசேகர, ரொஷான் ரணசிங்க, ஜயந்த கெட்டகொட, காமினி லொக்குகே, பந்துல குணவர்த்தன, எஸ்.எம். சந்திரசேன, வீரகுமார திஸாநாயக்க, உதித்த லொக்குபண்டார ஆகியோருக்கும் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரண துங்க, மாகாண சபை உறுப்பினர் களான உதய கம்மன்பில, ரொஜர் செனவிரத்ன ஆகியோர் உள்ளிட்ட 27 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வட்டினாபா சோமானந்த, முருந்தெட்டுவே ஆனந்த தேரோ, மெதகொட அபேதிஸ்ஸ தேரோ, இத்தேகந்தே சத்தாதிஸ் தேரோ, கலகொட அத்தே ஞானசார தேரோ ஆகிய தேரர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.

நேற்றைய நீதிமன்றில் ஆஜரான இவர்கள் தனிநபர் பிணையில் விடு தலை செய்யப்பட்டுள்ளனர். என்றும் ஞானசாரதேரர் நீதிமன்றில் ஆஜராகி யிருக்கவில்லை. இதன் காரணமாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் கலகொட ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Published by

Leave a comment