ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிலிருந்து இராணுவத்தினர் நீக்கம்

army presidential securityகொழும்பு: ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் அப்பிரிவில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். நிர்வாக தேவைகள் காரணமாக முன்னாள் ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு படையே (Presidential Guard) கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டு அப்பிரிவிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி பிரிவில் இதுவரை காலமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட படையினர் தாம் ஏற்கனவே சேவையாற்றி வந்த தத்தமது ரெஜிமன்டுகள் மற்றும் பிரிவுகளுக்கு சேவையின் நிமிர்த்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

army presidential security

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கென பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் விசேட குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Published by

Leave a comment