டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது தொண்டர் சேவை பணிகளில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

unnamed1பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் அண்மையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்தப்பட்ட டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது தொண்டர் சேவை பணிகளில் ஈடுபட்ட காத்தான்குடி (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 09-05-2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் காரியாலத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் தலைமையில் இடம்பெற்ற இச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக காத்தான்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தசநாயக்க, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர, காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி துஷார ஜெயலால், காத்தான்குடி பொலிஸ் நிலைய நிருவாகப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெயசீலன், காத்தான்குடி பிரதேச சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் றபீக், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் தலைவர் எம்.ஏ.எம்.சயீத், செயலாளர் எம்.ஐ.எம்.சிஹாப், அமைப்பாளர் ஏ.எஸ். அஹமட் ஜவ்ஸகி உட்பட அதன் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது தொண்டர் சேவை பணிகளில் ஈடுபட்ட காத்தான்குடி (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் காத்தான்குடி பிரதேசத்தில் சிரமதானம், இரத்த தானம், கல்வி தொடர்பான இலவச வகுப்புக்கள் நடாத்துவது, நோயாளிகளை நலம் விசாரிப்பது போன்ற மனித நேயம் பேணும் சமூகப்பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment