லண்டன்: நேற்று முன்தினம் மே 7ம் திகதி பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது, கிழக்கு லண்டன் பிரதேசத்தில் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்களை நோக்கி “வாக்களிப்பது இஸ்லாத்தில் இல்லை” எனவும், “வாக்களிப்பது இறை நிராகரிப்பானது” “அது ஒரு ஷிர்க்” எனவும் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கிய சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தது பிரித்தானியாவில் தற்பொழுது பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.
பல்லின மக்கள் சுதந்திரமாகவும், தங்களது கலாசார மார்க்க விடயங்களை தங்கு தடங்களின்றி கடைப்பிடிக்க சட்டம் வழங்கப்பட்டிருக்கும் பிரித்தானியாவில், இத்தகைய தீவிரவாத சிந்தனை அங்குள்ள பல்லினத்தவர்களை பாதித்திருப்பதுடன், முஸ்லிம்களையும் காயப்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவுக்குள் நுழைய வேண்டும், அங்கு குடியுரிமை பெறவேண்டும் அதற்கு அங்குள்ள சட்டங்களை மதிப்பதாகவும் இதற்காகவே பல மில்லியன்களைக் கொடுத்து இங்குவரும் குடியேறிகள், பின்னர் இங்குள்ள அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் நிலை காணப்படுவதாக பிரித்தானிய பத்திரிகைகள் இச்சம்பவங்களை மேற்கோள் காட்டிருக்கின்றன.
அந்நிய நாட்டில் வாழும் நாம், அங்குள்ள சட்டங்களை மதித்து நடப்பதுடன், எங்களுக்கு வழங்கியுள்ள இஸ்லாமிய சமய உரிமைகளை கண்ணியமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய முஸ்லிம் தலைவர்கள் கேட்டிருக்கின்றனர்.
ஆட்சி, அதிகாரங்களை வழங்குபவன் அல்லாஹ் ஒருவனாக இருந்தபோதிலும், தேர்தல் என்பதோ, வாக்களிப்பது என்பதோ இஸ்லாத்திற்கு முரணான செயலாகாது எனவும் அங்குள்ள முஸ்லிம் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
Published by



Leave a comment