சூட்கேசுக்குள் மறைத்து சிறுவனை கடத்திய யுவதி: காட்டிக்கொடுத்த ஸ்கேனர்

boy in baggage– AF-89

மெட்ரிட்: வட ஆப்ரிக்காவில் ஸ்பெயினுக்குச் சொந்தமான பிரதேசமான, சியுட்டாவில், எட்டு வயதுச் சிறுவன் ஒருவனை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து வைத்து கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கேன் மூலம் இதனை கண்டுபிடித்த அதிகாரிகள் சிறுவனைக் கடத்திய இளம்பெண்ணை கைது செய்தனர்.

மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த அந்த 8வயது சிறுவன், ஸ்பெயின் நாட்டின் சியூட்டாவிற்க சூட்கேசில் கடத்தப்பட்டு உள்ளான் என்று ஸ்பெயின் பொலீசார் தெரிவித்து உள்ளனர். 19-வயது இளம்பெண், ஸ்பானிஷ் விமான நிலையத்திற்கு சூட்கேசுடன் வந்து உள்ளார். அப்போது அந்த பெண்மணியில் சூட்கேஸ் ஸ்கேனர் கருவியில் வைக்கப்பட்டது.

அந்த சூட்கேஸை ஸ்கேன் செய்த அதிகாரி அதிர்ச்சியடைந்தார். காரணம் அந்த பெட்டிக்குள் கால்கள் மடக்கப்பட்ட நிலையில் ஒரு உருவம் தெரிந்தது. அந்தப் பெட்டியை திறந்து பார்த்தனர், அதில் 8 வயது சிறுவன் உயிரோடு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த சிறுவனை மீட்டு அதிகாரிகள், குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

boy in baggage

8 வயது சிறுவன் அபு என்றும், இவர் ஐவரி கோஸ்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்து உள்ளது. சூட்கேசுக்குள் சிறுவனை மறைத்து கொண்டு வந்த 19 வயது பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பெண்ணை நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தினர்.

சிறுவனின் தந்தையையும் அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். அவரும் சட்டவிரோதமாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது சிக்கிக் கொண்டார். அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் தந்தையும் ஐவரி கோஸ்டை சேர்ந்தவர், ஆனால் ஸ்பெயினின் கனாரே தீவில் வாழ்ந்து வருகிறார்.

Published by

Leave a comment