Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கொழும்பில் இடம் பெற்ற ஊடக மாநாட்டில் அமைச்சர் றிசாத் பதியுதீன்

    இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் கொழும்பு: என் மீது சுமத்தப்படுவது போலி குற்றச்சாட்டுக்கள் எனவும், இதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட அமைப்புக்களின் மற்றுமொரு சதியாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு வெளி மாவட்டத்தாரின் குடியேற்றமும் இடம் பெறவில்லையெனவும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே மீளக்குடியேறுவதாகவும் கூறினார்.

  • இளைஞர் யுவதிகளுக்கு இரண்டாம் மொழி கற்பிக்கும் நடவடிக்கை

    எம்.எஸ்.எம். ஸப்றாஸ் ஏறாவூர்: தேசிய மொழிக் கொள்கை சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு இரண்டாம் மொழிகற்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள நூறு இளைஞர் யுவதிகளுக்கு சிங்கள மொழியை ஆறுமாதகாலத்தில் கற்பிக்கும் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் அடிக்கடி தனக்கு அனுமதிவழங்க மறுப்பு: எம்ரீஎம் நிஸாம்

    எம்.எஸ்.எம்.ஸப்றாஸ் மட்டக்களப்பு: பாடசாலைகளில் நடைபெறும் வைபவங்களில் தான் கலந்து கொள்வதற்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் அடிக்கடி தனக்கு அனுமதிவழங்க மறுப்புத் தெரிவிப்பதாக கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம் ரீஎம். நிஸாம் தெரிவித்துள்ளார்.

  • சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்து வில்லைகளை காத்தான்குடி லைப் கெயா நிறுவனம் வழங்கி வைத்துள்ளது

    – ஹாசிப் யாஸீன், எம்.ஐ.சம்சுதீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்து வில்லைகளை காத்தான்குடி லைப் கெயா நிறுவனம் வழங்கி வைத்துள்ளது. இம்மருந்து வில்லைகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (07) சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் வைத்திய அதிகாரியுமான டாக்டர் என்.ஆரிப் தலைமையில் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

  • தேக்கு மரக்குற்றிகளை கடத்திய குற்றச்சாட்டில் ஒன்பதுபேர் கைது

    – எம்.எஸ்.எம். ஸப்றாஸ் ஏறாவூர்: தொப்பிகல பகுதியை அண்மித்த அரசாங்க காட்டில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை பைசிக்களில் கொண்டுசென்ற குற்றச்சாட்டின்பேரில் ஒன்பதுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் ஒன்பது பைசிக்கள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டிஆர் விஜயவிக்ரம தெரிவித்தார்.

  • ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மாநாடு நாளை நடைபெறும்

    காத்தான்குடி: ‘ஃபீல்ட மார்ஷல்’ சரத் பொன்சேகா அவர்களின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு மாநாடு நாளை 08.05.2015 வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது. காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள ப.நோ.கூ.சங்க மாநாட்டு மண்டபத்தில் மாலை 06:30 மணிக்கு மண்டல மத்திய குழுத் தலைவர் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சகோதரர் ஏ.எம்.ஏ. மிப்ஷி அவர்களின் தலைமையில் இம்மாநாடு நடைபெறும்.

  • “முஸ்லிம் சமூ­கத்­திற்கு அநி­யா­ய­மி­ழைக்­கப்­பட்­ட­போது சட்­டத்தை அமுல்­ப­டுத்­தாது வேடிக்கை பார்த்த முன்னாள் ஜனா­தி­பதி இன்று முஸ்­லிம்­க­ளுடன் சந்­திப்­பு­களை ஏற்­பா­டு­செய்­வ­தா­னது நகைச்­சு­வை­யாக இருக்­கி­றது”

    கொழும்பு: முஸ்லிம் சமூ­கத்­திற்கு அநி­யா­ய­மி­ழைக்­கப்­பட்­ட­போது சட்­டத்தை அமுல்­ப­டுத்­தாது வேடிக்கை பார்த்த முன்னாள் ஜனா­தி­பதி இன்று முஸ்­லிம்­க­ளுடன் சந்­திப்­பு­களை ஏற்­பா­டு­செய்­வ­தா­னது மிகப்­பெ­ரிய நகைச்­சு­வை­யாக இருக்­கி­றது என மேல் மாகாண சபை உறுப்­பி­னரும் மத்­திய கொழும்பு ஐக்­கிய தேசிய கட்­சியின் பிர­தான அமைப்­பா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

  • E.P.F நிலுவையை நீங்களே அறியலாம்

    கொழும்பு: ஊழியர் சேமலாப நிதிய (EPF) உறுப்பினர்கள் தமது பெயரிலுள்ள நிலுவையை தாமாகவே பரிசோதித்துக்கொள்ளும் புதிய ஏற்பாடு நேற்று முதல் அமுலானது. தொழிலமைச்சர் எஸ்.பீ. நாவின்ன நாரஹென்பிட்டி தொழில் செயலகத்தில் இந்தச் சேவையை ஆரம்பித்து வைத்தார்.இதற்காக புதிதாக கருவியொன்று பொருத்தப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தமது நிலுவையை உறுப்பினர்கள் அறிந்து கொள்ளலாம்.

  • 13 கோடி ரூபா மோசடி: கோட்டாவுக்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு!

    அம்பாறை: அம்பாறை மாவட்டத்தில் 2013 நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ 13 கோடி ரூபாவை மோசடி செய்ததாக மக்கள் விடுதலை முன்னணி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

  • பிரிட்டிஷ் தேர்தல் இன்று

    லண்டன்: இன்று 7ம் திகதி பிரிட்டிஷ் பொதுத்தேர்தல் சுமுகமாக இடம்பெறுகிறது. எதிரிகள் மீது குண்டுகளை வீசாமல், போலி வாக்குறுதிகளை ஏமாந்த மக்களுக்கு மீண்டும் மீண்டும் வழங்கி, தான் மட்டும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற சந்தர்ப்ப அரசியலைக் கடந்து ஓர் ஜனநாயக நாட்டுக்கான பொதுத்தேர்தலில் பிரதான ஏழு வேட்பாளர்கள் தேர்தலில் குதித்திருக்கின்றனர்.

  • நேபாள் பூகம்பம்: சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிதி சேர்ப்பு பணி

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: நிலநடுக்க அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டு மக்களுக்கு நிவாரண நிதி உதவிகளை சேகரிக்கும் பணியினை சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் நேற்று (06) புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

  • “மைத்திரி-மஹிந்த சந்திப்பு வரலாற்றில் மிகச் சிறந்த ஜோக்”: அசாத் சாலி

    கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பானது வரலாற்றில் மிக சிறந்த கேலி என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

←Previous Page
1 … 442 443 444 445 446 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar