-
காலி அத்-தக்வா ஜும்ஆப் பள்ளிவாயலின் புதிய கட்டடத் திறப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் காலி: காலி மொறகொட என்ற பகுதியில் அமைந்துள்ள அத்-தக்வா பள்ளிவாயல் சுமார் 14 வருட காலமாக பல மைல்கற்களைத் தாண்டி தனது தஃவாப் பணியை காலி மாநகருக்கு ஒளிச் சுடராய் ஒளிர்வித்துக்கொண்டு இருந்தது.
-
காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சர்ச்சை தொடர்பில் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு: ஓடியோ இணைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சர்ச்சை தொடர்பில் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு 07-06-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காத்தான்குடி கடற்கரையிலுள்ள கடாபி பீச் காடன் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
ஓட்டுத்தொழிற்சாலைக்கு றிசாத் பதியுதீன் இன்று விஜயம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஒட்டுச் சுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று திங்கட்கிழமை விஜயம் செய்தார்.
-
தொழில்நுட்ப ஆய்வுகூடக் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு
ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடக் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
-
சமூகசேவை உத்தியோகஸ்தர் கொலையை கண்டித்து த.தே.கூ. வின் ஆர்ப்பாட்டப் பேரணி
எச்.எம.பாத்திமா சா்மிலா மட்டக்களப்பு: நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவந்த சமூகசேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதாயன் (வயது 44) மண்டூரிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரினால் கடந்த 26ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்தும் இக்கொலையுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
-
“நாம் வெற்றி பெற்றால் சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம்”:
கொழும்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் உண்மையில் பழிவாங்கும் நபர் அல்ல. ஆனால் எமது குழுவை நம்ப முடியாது. இவர்கள் அனைவரும் நல்லாட்சி குறித்து கடும் கோபத்தில் உள்ளனர். என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியாது.
-
“மஹிந்த ராஜபக்ஷ முஜிபுர் ரஹ்மானை தன் பக்கம் ஈர்த்துக்கொள்ள முயற்சித்தார்- அது சாத்தியப்படவில்லை”
கொழும்பு: முன்னாள் அமைச்சர் மொஹமட் மஹ்ரூபை மஹிந்த அரசு ஈர்த்துக்கொண்டபோது முஜிபுர் ரஹ்மானையும் ஈர்த்துக்கொள்ள முயற்சித்தது. எனினும் முஜிபுர் ரஹ்மானின் புத்திசாலித்தனத்தால் அது சாத்தியப்படவில்லை என கொழும்பு மாநகரசபை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.
-
முஸ்லிம் சமூக கரிசனைகள் உள்வாங்கப் படாமல் அரசியலமைப்பின் மீதான 20 ஆவது சீர்திருத்த சட்ட மூலம் நிறைவேறுகின்றது
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: மைத்திரி அரசு வரலாற்று முக்கியத்துவமிக்க அரசியலமைப்பின் மீதான 20 ஆவது சீர்திருத்த சட்ட மூலம் இன்ஷா அல்லாஹ் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவிருக்கின்றது, பாராளுமன்றில் அது நிறைவேற்றப்பட்டவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்வுள்ளது, ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தலும் இடம் பெறும் சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளன.
-
மஹிந்தவுக்கு அமைச்சர் ரவி விடுத்துள்ள விவாத அழைப்பு
கொழும்பு: நாட்டின் பொருளாதார பின்னடைவு குறித்து விவாதிக்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 12 வருட காலமாக பொருளாதாரத்திற்கு பொறுப்பாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதனால் பந்துலவின் சவாலை மஹிந்த ரஜபக்ஷவிற்கு முன்வைப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மீளச் செலுத்தாத நிலையில் 200 கோடி ரூபா கடன்!
கொழும்பு: லங்காபுத்ர அபிவிருத்தி வங்யிலிருந்து 200 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாதுள்ள 15 கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 750 லட்சம், 1000 லட்சம் ரூபா என்ற வகையில் கடன் பெற்ற வர்த்தகர்களில் சிலர் ஒரு தவணைக் காசையாவது செலுத்தாது இருப்பதாக வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
கல்முனை பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு நாளை ஆரம்பம்
ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை ஸாஹிரா கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடம் காலை 8.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளதுடன் கல்முனை மஹ்மூத் பாலிகா மகளிர் கல்லூhயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடம் காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
-
மறிச்சுக்கட்டி மொஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக கையொப்பம் பெறும் வேட்டை
மறிச்சுக்கட்டியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மறிச்சுக்கட்டி: மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மறிச்சுக்கட்டி, பாலக்குளி, கரடிக்குளி, கொண்டச்சி பூர்வீக கிராமங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் தம்மை இங்கிருந்து வெளியேற்ற எடுக்கப்படும் வேலைத்திட்டத்தை கண்டித்தும், தமது தாயக பூமியில் இறுதி மூச்சு வரை தாங்கள் வாழ்வதற்கு அரசாங்கம் உரிய உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என கோறி 2 இலட்சம் மக்களின் கையொப்பத்தை பெறும் வேட்டை இன்று ஞாயிற்றுக்கிழமை இப்பிரதேச மக்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.