கொழும்பு: மைத்திரி அரசு வரலாற்று முக்கியத்துவமிக்க அரசியலமைப்பின் மீதான 20 ஆவது சீர்திருத்த சட்ட மூலம் இன்ஷா அல்லாஹ் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவிருக்கின்றது, பாராளுமன்றில் அது நிறைவேற்றப்பட்டவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்வுள்ளது, ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தலும் இடம் பெறும் சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளன.
தேர்தல் முறை மாற்றங்களை மையமாகக் கொண்ட மேற்படி சட்ட மூலம் விகிதாசார மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறையின் கலப்பு முறையொன்றை சிபாரிசு செய்கின்றது, தொகுதிவாரி தேர்தல் முறையும் அதனை அடிப்படையாக கொண்ட மாவட்ட விகிதாசார பிரதிநிதித்துவ முறையும் முஸ்லிம்களுக்கு பாதகமாக இருக்கும் என சுட்டிக் காட்டப் பட்டாலும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஆக்கபூர்வமாக தமது கோரிக்கைகளை முனவைக்காத நிலையினில் மேற்படி சட்டமூலம் அவசர அவசரமாக பாராளுமன்றத்திற்கு வருகின்றது.
புதிய பாராளுமன்றம் செப்தம்பர் மாதமளவில் கூடிய பின்னர் இந்த சட்டமூலம் குறித்த மேலதிக அம்சங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமெனவும் நடைபெறுகின்ற தேர்தலை விகிதாசார முறையின் கீழ் நடாத்தினாலும் தற்பொழுது இருக்கின்ற தொகுதிகழிந பிரதி நிதித்துவங்கள் உறுதி செய்யப்படுகின்ற இடைக்கால முறையொன்றின் கீழ் தேர்தல்கள் நடாத்தப் படுவதற்கான உடன்பாடு எட்டப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது, அவாவ்ரான ஒரு நிலையிலும் முஸ்லிம் சமூக பிரதிநிதித் துவம் குறைகின்ற நிலை இருக்கின்றது.
இனவாத அரசியலுக்கு அப்பால் தேசிய அரசியல் நீரோட்டத்தில் பரந்துபட்ட பரிமாணங்களில் முஸ்லிம் அரசியல் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதனால் ஜனநாயக மற்றும் நல்லாட்சி விழுமியங்களை முதன்மைப் படுத்துகின்ற ஒரு அரசியல் பயணத்தில் தனிப்பட்ட ஒரு சமூகத்தின் ஜனநாயக உரிமைகள் காவு கொள்ளப் படுதல் ஆரோக்கியமான முன்னேற்றமாக தெரியவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் கையறு நிலைக்கு அடுத்த சமூகங்களை எந்த வகையிலும் குறைகாண முடியாது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும், தேர்தல் மோரை சீர்திருத்தங்கள், தொகுதிகளின் எல்லை மீல்நிர்ணயங்கள், உள்ளூராட்சி, மற்றும் பிரதேச செயலாளர் எல்லைகள் நிர்ணயம், திவி நெகும சட்ட மூலம் என பல அதிமுக்கியமான சீர்திருத்தங்கள் கடந்த அரச காலத்தில் ஆராயப்பட்டு நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த பொழுதும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஆய்வு பூர்வமாக முஸ்லிம் சமூகம் சார்பாக எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவுமில்லை, முன்மொழிவுகளை சமூகத் தளத்தில் கலந்தாலோசிக்க்கவுமில்லை.
முஸ்லிம் சமூக உரிமைப் போராட்ட அரசியலை பதவிகளுக்கும் சலுகைகளுக்குமான சூதாட்ட அரசியலாக மாற்றி, நக்குண்டு நாவிழந்து “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” எனும் சரணாகதி அரசியலாக மாற்றிவிட்ட குட்டி சுல்தான்களின் இல்லாமைக்கும் இயலாமைக்கும், கையாளாகாத் தறிகெட்ட நிலைக்கும் மாற்றீடு இல்லாமல் இன்னுமொரு தேர்தலையும் முஸ்லிம் சமூகம் சந்திக்கின்றது.
Published by

Leave a comment